இந்தியா

திருப்பதியில் ரூ.140 கோடி உண்டியல் வருமானம்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆகஸ்ட் மாதம் முழுவதும் 22.8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் திருப்பதியில் 140.7 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வரும் போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்னர் கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது. அதில் கடந்த மாதம் மட்டும் அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.5.86 கோடி வரை உண்டியல் வசூலானதையடுத்து 22 நாளில் ரூ.100 கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது. கடந்த மாதம் முழுவதும் 22.8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் 140.7 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்தது புதிய சாதனையாக பதிவாகி உள்ளது.


Share
ALSO READ  Paytm செயலி தடையை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை…..
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விலங்குகளைத் துன்புறுத்தினால் சிறை தண்டனை – மத்திய அரசு

naveen santhakumar

குடும்பத்தோடு அமெரிக்கா பறந்தார் சன்னிலியோன்..

naveen santhakumar

இந்த பேச்சு வார்த்தையாவது வெற்றிபெறுமா..! கவலையுடன் விவசாயிகள்..!

News Editor