அஜ்மீர்:-
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் அருகே உள்ள ஒரு அரண்மனையில் செல்பி எடுத்த போது மின்னல் தாக்கி 18 பேர் உயிரிழந்த துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜெய்ப்பூர் அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த அமர் அரண்மனை உள்ளது. இங்கு நேற்று (ஜூலை 11) மாலையில் மாநிலம் முழுவதும் அதீத மழை பெய்தது. இந்நேரத்தில் பலர் கண்காணிப்பு கோபுரம் மீது ஏறி அரண்மனை சுற்றுப்பகுதிகளை பைனாகுலர் மூலம் பார்த்து கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் மின்னல் தாக்கியுள்ளது. இதில் 27 பேரில் 11 பேர் பலியாகினர். பலர் கோபுரத்தில் இருந்து குதித்ததில் காயமுற்றனர். பலியானவர்களில் சிறார்கள் 5 பேர் ஆவர்.
இதே போல் கோடா, ஜலாவர், பரண் உள்ளிட்ட பகுதிகளில் மின்னல் தாக்கியதில் சிறார்கள் 3 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
இதனிடையே ராஜஸ்தானில் மின்னல் தாக்கி உயிரிழந்த 18 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மின்னல் தாக்கியதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.