இந்தியா சாதனையாளர்கள் சினிமா

66வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா:மகாநடி படத்திற்காக கீர்த்தி சுரேஷ்க்கு சிறந்த நடிகைக்கான விருது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி விக்யான் பவனில் நடைபெறும் 66வது தேசிய திரைப்பட விழாவில், விருதுகளை குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வழங்கினார். விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் பங்கேற்றார். இந்த ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது.

திரைப்படத் துறையில் அளிக்கப்படும் உயா்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதுக்கு இந்த ஆண்டு பாலிவுட் நடிகா் அமிதாப் பச்சன் தோ்வு செய்யப்பட்டாா். ஆனால் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பயணம் மேற்கொள்ள முடியாத சூழலில் தான் உள்ளதாக தெரிவித்துள்ள நடிகர் அமிதாப் பச்சன், விழாவில் தான் கலந்துகொள்ள முடியாமைக்காக வருத்தமும் தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் மகாநடி படத்தில் நடித்த‌ கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. ப்ரியா கிருஷ்ணஸ்வாமி இயக்கிய  ‘பாரம்’  படம் சிறந்த தமிழ்ப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் பாரம்படக்குழுவினர் விருதை பெற்றுக் கொண்டனர்.

கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படம் சிறந்த தெலுங்குப் படம் என்கிற தேசிய விருதைப் பெற்றது. இந்த முறை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு பதிலாக வெங்கய்ய நாயுடு விருதுகளை அளித்துள்ளார். விருதுகளை பெற்றவா்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேநீா் விருந்து அளிக்கவுள்ளாா்.

தேசிய விருதுப் பட்டியல்:

சிறந்த படம் – எல்லாரு (குஜராத்தி)
சிறந்த இயக்குநர் – ஆதித்யா தர் (உரி, ஹிந்தி)
சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ் (மகாநடி, தெலுங்கு)
சிறந்த நடிகர் – ஆயுஷ்மா குரானா (அந்தாதுன், ஹிந்தி), விக்கி கெளசல் (உரி, ஹிந்தி)
சிறந்த அறிமுக இயக்குநர் – சுதாகர் ரெட்டி (மராத்தி)
நர்கீஸ் தத் தேசிய ஒருமைப்பாடு விருது – ஒண்டல்லா இரடல்லா (கன்னடம்)
சிறந்த பொழுதுபோக்குப் படம் – பதாய் ஹோ (ஹிந்தி)
சமூக நலனுக்கான சிறந்த படம் – பேட்மேன் (ஹிந்தி)
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறந்த படம் – பானி (மராத்தி)
சிறந்த துணை நடிகர் – ஸ்வானந்த் கிர்கிரே (சும்பக், மராத்தி)
சிறந்த துணை நடிகை – சுரேகா சிக்ரி (பதாய் ஹோ, ஹிந்தி)
சிறந்த குழந்தை நட்சத்திரம் – பிவி ரோஹித் (கன்னடம்), சமீப் சிங் (பஞ்சாபி), தல்ஹா அர்ஷத் ரேஷி (உருது), ஸ்ரீனிவாஸ் போக்லே (மராத்தி)

ALSO READ  சுந்தர் பிச்சையின் வருமானம் ரூ.2788 கோடியாக உயர வாய்ப்பு...

சிறந்த பாடகர் – அர்ஜித் சிங் (பத்மாவத், ஹிந்தி)
சிறந்த பாடகி – பிந்து மாலினி (நதிசரமி, கன்னடம்)
சிறந்த வசனம் – தரிக் (வங்காளம்)
சிறந்த திரைக்கதை (தழுவல்) – அந்தாதுன்
சிறந்த அசல் திரைக்கதை – சி அர்ஜூன் லா சோ (தெலுங்கு), அந்தாதுன் (ஹிந்தி), தரிக் (வங்காளம்)
சிறந்த ஒலி அமைப்பு – டெண்ட்லியா (மராத்தி), உரி (ஹிந்தி), ரங்கஸ்தலம் (தெலுங்கு)
சிறந்த படத்தொகுப்பு – நதிசரமி (கன்னடம்)
சிறந்த கலை இயக்கம் – கம்மர சம்பவம் (மலையாளம்)
சிறந்த ஒப்பனை – ஏவ் (தெலுங்கு)
சிறந்த இசையமைப்பாளர் – சஞ்சய் லீலா பன்சாலி (பத்மாவத், ஹிந்தி)
சிறந்த பின்னணி இசை – ஷஸ்வத் சச்தேவ் (உரி, ஹிந்தி)
சிறந்த பாடலாசிரியர் – மனசோர் (நதிசரமி, கன்னடம்)
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் – ஆவ் (தெலுங்கு), கேஜிஎஃப் (கன்னடம்)

ALSO READ  Mostbet Uzbekistan Официальный сайт спортивных ставок и онлайн-казино UZ 202

சிறந்த குழந்தைகள் படம் சர்காரி- (SARKARI HIRIYA PRATHAMIKA SHALE KASARGODU, கன்னடம்)
சிறந்த நடனம் – க்ருதி மஹேஷ், ஜோதி டி தொம்மார் (பத்மாவதி, ஹிந்தி)
திரையுலகுக்கு ஏற்ற மாநிலம்  –  உத்தராகண்ட்
சிறப்பு விருதுகள்: ஹெல்லாரோ (குஜராத்தி), கெடாரா (வங்காளம்), ஸ்ருதி ஹரிஹரன் (கன்னடம்), சந்திரசூர் ராய் (ஹிந்தி), ஜோஜோ ஜார்ஜ் (மலையாளம்), சாவித்ரி (மலையாளம்)
சிறந்த ஆடை வடிவமைப்பு: மகாநடி (தெலுங்கு)
சிறந்த சண்டை இயக்கம் – கேஜிஎஃப் (கன்னடம்)
சிறந்த ஒளிப்பதிவாளர்: எம்.ஜே. ராதாகிருஷ்ணன் (மலையாளம்)


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 12 வயது சிறுவன் உயிரிழப்பு…….

Admin

இந்தியாவில் 3.5 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

News Editor

Mostbet Uzbekistan Официальный сайт спортивных ставок и онлайн-казино UZ 202

Shobika