இந்தியா வணிகம்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2020 -21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பட்ஜெட் முறையின் சிறப்பம்சங்கள்:- 

உலகிலேயே ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது.

 இதுவரை இல்லாத சாதனையாக புதிதாக 16 லட்சம்    பேர் வரி செலுத்துபவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 இதுவரை 40 கோடி வர்த்தகர்கள் ஜிஎஸ்டி இல் பதிவு செய்துள்ளனர்.

 ஜிஎஸ்டி காரணமாக சரக்கு போக்குவரத்து தொழில் திறன் மேம்பட்டு இருப்பதுடன் அதிகாரிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு சிறு குறு நடுத்தர தொழில் நுகர்வோர்களும் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பயனடைந்துள்ளனர்.

பாசனத்திற்காக தண்ணீர் தட்டுப்பாடு உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை  அளிக்கப்பட்டுள்ளது.

 வேளாண் துறையை போட்டி நிறைந்ததாக மாற்றவும் வேளாண் சந்தையை தாராளமயமாக்கம் 15 அம்ச திட்டம்.

 ஒரு மாவட்டத்திற்கு  ஒரு வேளாண் உற்பத்திப் பொருள் என்ற நோக்கத்தில் ஆன புதிய திட்டம். 

 வேளாண் கடனுக்கான நிதி ஒதுக்கீடு 15 லட்சம் கோடி ரூபாய்.

ஊரக வளர்ச்சிக்கு ரூபாய் 1.23 லட்சம் கோடி ரூபாய்  நிதி ஒதுக்கீடு

 வேளாண் துறைக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

 சுய உதவி குழுக்கள் வாயிலாக கிராமங்களில் சேமிப்புக் கிடங்கு அமைக்கப்படும்.

2025 ஆம் ஆண்டுக்குள் பால் உற்பத்தியை இரு மடங்காக உயர்த்த நடவடிக்கை.

இந்திரதனுஷ் திட்டம் விரிவாக்கத்தின் மூலமாக கூடுதலாக 112 மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் தனியார் மற்றும் அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

 2025 ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக நாட்டிலிருந்து காசநோய் ஒழிக்கப்படும்.

தூய்மை பாரதம் திட்டத்திற்காக ரூபாய்  12 ஆயிரத்து 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

மாவட்ட மருத்துவமனைகளில் கூடுதலாக  மருத்துவர்களை நியமிக்க திட்டம். மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவ கல்லூரிகள் அமைக்கவும் புதிய திட்டம்.

 புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் சிறந்த கல்வி வழங்கும் வகையில் நேரடி அந்நிய முதலீடு   ஈர்க்க திட்டம். 

வேலை வாய்ப்புகளை அளிக்கும் வகையிலான புதிய கல்வித் திட்டம் அறிமுகம்.

ALSO READ  ஆர்.என். ரவி தமிழ்நாடு ஆளுநராக நியமனம்

 வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில் “இந்தியாவில் கல்வி கற்க வாருங்கள்” என்ற புதிய திட்டம் ஆசியா மற்றும்  ஆப்பிரிக்க நாடுகளில் பிரபல படுத்தப்படும்.

கல்வித்துறைக்கு 99 ஆயிரத்து 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தொழில் துறைக்கும் வர்த்தகத் துறைக்கும் ரூபாய் 27 ஆயிரத்து 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

 தேசிய தொழில்நுட்ப ரீதியிலான ஜவுளி இயக்கம்  உருவாக்கப்படும்.

புதிய கட்டமைப்பு திட்டம் அறிவிப்பு. கட்டமைப்பு துறைக்கு 100 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு .

மேலும் 5 புதிய பொலிவுறு நகரங்கள் ஏற்படுத்தப்படும்.

ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும் கூடுதலாக தேஜஸ் ரயில்கள் இயக்கப்படும்.

 27 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை மின் மயமாக்கப்படும்.

 மின்சாரத் துறையில் புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த நடவடிக்கை.  2023-ம் ஆண்டுக்குள் ப்ரீபெய்ட் டிஜிட்டல் மீட்டர் வசதி அறிமுகம் செய்யப்படும்.

 அனைத்து கிராமங்களுக்கும் பைபர் நெட் வாயிலாக இணையவசதி.

 குழாய் வழியே சமையல் எரிவாயு எடுத்து செல்லும் திட்டம் விரிவாக்கம் கூடுதலாக 16 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய்கள் அமைக்கப்படும்.

 திட்டத்தின் கீழ் புதிதாக நாடு முழுவதும் 100 விமான நிலையங்கள் அமைக்கப்படும் சுற்றுச்சூழலை பாதுகாக்க சுத்தமான காற்று இயக்க  திட்டம். இத்திட்டத்திற்கு 44 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.

ஊட்டச்சத்து திட்டத்திற்கு 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

பழங்குடியினர் நலனுக்காக 53 ஆயிரத்து 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

 பட்டியலினத்தவர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நலத் திட்டங்களுக்கு 85,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

 மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு முற்றிலும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 சுற்றுலாத்துறையை மேம்படுத்த  முன்னுரிமை கொடுக்கப்படும். ரூபாய் 25000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

ALSO READ  VAT வரியை மூன்று மடங்கு உயர்த்தும் சவூதி அரேபியா...

 ஜம்மு-காஷ்மீர் மாநில மேம்பாட்டு  நிதியாக 30 ஆயிரத்து 757 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 லடாக் மேம்பாட்டு நிதியாக 5 ஆயிரத்து 958 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

 முதலீட்டாளர்களின்   வைப்பு தொகைக்கான காப்பீடு ஒரு லட்சம் ரூபாயில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்வு.

விவசாய விளைபொருட்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் கொண்டு செல்ல விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் சார்பாக கிருஷி உடான் என்கிற புதிய விமானம் துவங்கப்படும்.

 எளிதில் அழுகும் தன்மையுள்ள விவசாய விளை பொருட்களை கொண்டு செல்ல ஏதுவாக ரயில்வே  அமைச்சகத்தின் சார்பில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட புதிய கிசான் ரயில்கள் இயக்கப்படும்.

 550 ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி ஏற்படுத்தப்படும்.

நாட்டில் ஐந்து முக்கியமான  அகழ்வாய்வு இடங்களில் அருங்காட்சியகங்கள் அமைக்க முடிவு.  இதில் தமிழ்நாட்டில் உள்ள பழமையான அகழ்வாய்வு இடமான ஆதிச்சநல்லூர்  அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும்.

 எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு.

 மத்திய அரசின் மலிவு விலை மருந்தகங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

 தரிசு நிலங்களில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கு ஊக்கம் அளிக்கப்படும்.

 சென்னை பெங்களூரு புதிய எக்ஸ்பிரஸ் வழித்தடம் (New Express Way) 2023-ம் ஆண்டுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 பஞ்சாயத்து ராஜ் திட்டத்திற்கு 1.23 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

 ஆண்டுக்கு ரூபாய் ஐந்து லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி இனி இல்லை.

 ரூபாய் 5 லட்சத்தில் இருந்து 7.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைப்பு.

 ரூபாய் 7.5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி 15 சதவீதமாக குறைப்பு.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய வான்வெளியில் பறப்பதை தவிர்த்து மலேஷியா சென்ற இம்ரான் கான்

Admin

Apuestas Deportivas Perú 2022 Casas de Apuestas Per

Shobika

Odkryj Emocje Związane Unces Grami Onlin

Shobika