இந்தியா

முடியை தவறுதலாக ஒட்ட வெட்டியதற்கு அபராதம் ரூபாய் 2 கோடி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புது டெல்லி:

புது டெல்லியில் ஷாம்பு உள்ளிட்ட கூந்தல் பராமரிப்பு சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு 42 வயது பெண் ஒருவர் மாடலிங் செய்து வந்தார். கடந்த 2018 ஏப்ரல் மாதம் தனது துறையில் ஒரு முக்கியமான நேர்காணலுக்கு செல்ல இருந்தார்.

நேர்காணலுக்கு செல்வதற்கு முன்புது டெல்லியில் உள்ள மிகப் பெரிய ஹோட்டலில் உள்ள சலூனுக்கு சென்று தன்னுடைய கூந்தலை அழகுப்படுத்திக்கொள்ள எண்ணியுள்ளார். அங்கு உள்ள சிகையலங்கார நிபுணரிடம் முன்பக்கம் ப்ளிக்ஸ் செய்யும் படியும் , தனது கூந்தலின் அடிப்பகுதியை நான்கு அங்குலம் வரை ட்ரிம் செய்யும்படியும் கூறியுள்ளார்.

ALSO READ  சமூக ஊடகங்களிலிருந்து வெளியேற போவதாக பிரதமர் மோடி அறிவிப்பு…
ট্রিটমেন্টের সময়ে পুড়ে গেল মাথার ত্বক, সেলুনকে ২ কোটি টাকা ক্ষতিপূরণের  নির্দেশ - Pay ₹2 crore compensation for wrong haircut: Delhi-based 5/7 star  hotel asked by court , Bangla News

சிகையலங்கார நிபுணர் மாடலிங் பெண்மணி கூறியதை தவறாக புரிந்து கொண்டு பின்னங்கழுத்திலிருந்து நான்கு அங்குலம் மட்டும் விட்டுவிட்டு மொத்த கூந்தலையும் கத்தரித்துள்ளார்.

40+ Hilariously Bad Haircuts That Will Never See Again - Small Joys

கடும் மன உளைச்சலடைந்த அப்பெண் தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தில் புகார் அளித்தார். அம்மனுவை விசாரித்த ஆணையம் மாடலிங் பெண்ணுக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்கும் படி மிகப் பெரிய ஹோட்டல் நிர்வாகத்திற்கு தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணைய உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ISRO தலைவர் சிவனின் பதவிக்காலம் நீட்டிப்பு:

naveen santhakumar

சிறந்த காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது

News Editor

மேற்கு வங்கத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறப்பு ! 

News Editor