இந்தியா

பனாரஸ் பல்கலையில் பாரதி தமிழ் இருக்கை….., பிரதமர் திரு.மோடி பெருமிதம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காசியில் உள்ள பனாரஸ் பல்கலைகழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் திரு .மோடி அறிவித்தார் ..

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தர்தம் பவன் மற்றும் பெண்கள் விடுதிகான பூமி பூஜையை அவர் இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பேசிய திரு.மோடி உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியாப் பெற்றுள்ளதாக கூறினார்.

மகாகவி .சுப்ரமணி பாரதியின் 100வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுவதாக தெரிவித்த திரு.மோடி ,கவிஞர்,எழுத்தாளர்,இதழாசிரியர் ,விடுதலை போராட்ட வீரர்,சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டு திகழ்ந்தவர் பாரதியார் என புகழாரம் சூட்டினார்.

ALSO READ  தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள்; காணொலி மூலம் திறந்துவைத்த பிரதமர்!

எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய பாரதியின் 100வது ஆண்டு நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் தமிழுக்கான சுப்ரமணிய பாரதி இருக்கை அமைக்கப்படும் என அவர் கூறினார்.

பிரதமர் திரு. மோடி கூறியது :

போற்றத்தக்க மொழிகளில் ஒன்று தமிழ் . உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான அதன் வளர்ச்சிக்கு சிறந்த தொண்டாற்றியவர் பாரதி . இந்தியர்களான நம் அனைவருக்கும் இது பெருமை .

ALSO READ  இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா; அச்சத்தில் மக்கள் !


பாரதியார் பெயரில் இந்து பனாரஸ் பல்கலைகழகத்தில் தமிழ் படிப்பிற்கான இருக்கை அமைக்கப்படும் . மாணவர்கள்,ஆராய்ச்சியாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் . இதன் மூலமாக பாரதியின் நவீன பாரதக் கனவுகள் நிச்சயம் நனவாகும்.

வேற்று மாநிலத்தவர் தமிழ் மொழி படிக்கவும் , தமிழாய்வு மாணவர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ளவும் , பாரதி இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் திரு.மோடி அறிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மது மற்றும் வெளிநாட்டு பொருட்களை விற்க தடை:

naveen santhakumar

Ставки На Спорт В России На Sports Ru: Список Лучших Букмекеров России, Последние Новости, Актуальные Прогнозы На Спортивные Матч

Shobika

முதல் மாதச் சம்பளத்துடன் பெற்றோரைக் காணச் சென்ற இளைஞர்… விபத்தில் பலியான பரிதாபம்…

naveen santhakumar