இந்தியா தொழில்நுட்பம்

Aarogya Setu ஆப்.. என்னென்ன வசதிகள் உள்ளது???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:-

MyGov என்ற செயலி மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வு தகவல்களை மத்திய அரசு, வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கண்காணிக்கும் வகையிலான பிரத்யேக செயலியை உருவாக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவா் நிலை குறித்து அறியவும், அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் அளிக்கவும் ஆரோக்கிய சேது (Arogya Setu) என்ற புதிய  மொபைல் செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இது அரசு-தனியாா் (PPP) கூட்டுமுயற்சியில் உருவாக்கப்பட்டள்ளது.

ALSO READ  கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நடிகை சுனைனா !

கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் வசிப்பிடத்தை மையமாகக் வைத்து இதன் செயல்பாடுகள் அமைந்துள்ளன. ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்தபின்னர், ஜிபிஎஸ்-ஐ (GPS) ஆன் செய்தால் நாம் இருக்கும் இடத்தின் அருகே கொரோனா பாதித்தவர் இருந்தால் சுட்டிக்காட்டும். மேலும், அருகில் உள்ள கொரோனா பாதிப்பு குறித்த இடத்தின் தூரத்தையும் செயலி காட்டிவிடும். 

கொரோனா வைரஸ் ஆபத்திலிருந்து விலகியிருப்பது எப்படி என்று நமக்கு பரிந்துரைக்கிறது. நமக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டால் அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்டிருந்தால் கூட இந்த செயலி, நமது தரவுகளை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளும். 

ALSO READ  Bonus 125% + 250 F

அதேசமயம் நமது தகவல்களை மூன்றாம் நபர்களால் பார்க்க முடியாது என இதன் தனியுரிமை கொள்கை (Privacy Policy) உள்ளது. தற்போது 11 இந்திய மொழிகளில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை இந்தியா முழுவதும் பயன்படுத்தலாம். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிகளவில் மது அருந்தும் பெண்கள் இந்த மாநிலத்தில் தான் அதிகமாம்…….எந்த மாநிலம்னு தெரியுமா??????

naveen santhakumar

சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி :

naveen santhakumar

நேபாள பிரதமருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதா ??- காங்கிரஸ் கடும் தாக்கு… 

naveen santhakumar