இந்தியா

விவசாயிகள் போராட்டத்திற்கு நடிகை மியா கலிஃபா ஆதரவு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய அரசு கொண்டுவந்துள்ள  வேளாண்  சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில்  இரண்டு மாதங்களுக்கு மேல் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அணைத்து  பேச்ச வார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன. 

அதனையடுத்து  குடியரசு தினத்தன்று நடந்த ட்ராக்டர் பேரணியில் விவசாயிகளும் போலீசார்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் ஒரு விவசாயி உயிரிழந்தார்.மேலும் பலர் காயமடைந்தனர். 

இதன் காரணமாக டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் சிங்கு, காசிபூர், டிக்ரி போன்ற இடங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக யாரும் உள்ளே நுழைந்து விடகூடாது என்பதற்காக டெல்லி காவல்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

ALSO READ  லண்டனில் இருந்து இந்திய வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று..!

அந்தவகையில் டெல்லி எல்லையான காசிபூர், டிக்ரி இடங்களில் டெல்லி காவல்துறையினர் ஆணிகளை பதித்துவைத்துள்ளனர். இந்த நடவடிக்கைகளை கண்டித்து பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு உள்ளூர் தலைவர்கள் முதல் உலக தலைவர்கள் வரை ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை மியா கலிஃபா டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு ட்வீட் செய்துள்ளார். மேலும் “நான் விவசாயிகள் பக்கமே நிற்பேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ  திரையரங்கில் 100 % பார்வையாளர்கள் அனுமதி ஆபத்தானது : அரவிந்த் சாமி கருத்து..!

#delhiprotest #farmeract #miakalifa #farmer #delhipolice #centralgovernment #narendrasinghdomar #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Bewertungen Zu Vulkanvegas Lesen Sie Kundenbewertungen Zu Vulkanvegas Com 4 Von 5

Shobika

இந்தியாவில் ஒரே நாளில் 18 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று..!

News Editor

மக்களே உஷார்!! தயவுசெய்து இந்த நம்பரில் இருந்து அழைப்பு வந்தால் அட்டென்ட் செய்யாதீர்கள்… உஷாரய்யா உஷார்!!!.

naveen santhakumar