இந்தியா

கங்கனா நக்மா மோதல்: கங்கனா குறித்து நக்மா நக்கல் குற்றச்சாட்டு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

நெபோடிசம் மூலமாகவே பாலிவுட்டில் வளர்ந்தவர் கங்கனா என்று நக்மா குற்றம் சாட்டியுள்ளார்.

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை பாலிவுட்டில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுஷாந்தின் தற்கொலைக்கு பாலிவுட் திரையுலகில் நிலவும் நெபோடிசம் எனப்படும் வாரிசுகள் ஆதிக்கமே காரணம் என்று கூறி இயக்குனர் கரண் ஜோஹர், சல்மான்கான், ஆலியா பட் உள்ளிட்டவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார் நடிகை கங்கனா ரணவத். இதனால் நடிகை ஆலியா பட் சமூக வலைதளங்களில் விலகினார். பாலிவுட் வாரிசு நடிகர்களின் ஆஸ்தான இயக்குனர் எனப்படும் கரண் ஜோகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மற்ற எவரும் கமெண்டுகள் செய்ய முடியாதபடி முடக்கி வைத்தார். 

இந்தநிலையில் நடிகையும், அரசியல்வாதியுமான நக்மா மொரார்ஜி, தனது டுவிட்டர் பக்கத்தில் கங்கனா குறித்து நக்கலாக குற்றச்சாட்டியுள்ளார். 

கங்கனா நெபோடிசம் நெபோடிசம் என யாரை குற்றம் சாட்டுகிறாரோ அவர்களால் தான் திரையுலகில் வளர்ந்தார், நெபோடிசத்தின் தூண் மீதுதான் உயர்ந்து நிற்கிறார் கங்கனா தீதி (சகோதரி) என அழுத்தமாக உதாரணங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  தனது செல்ல நாயுடன் கொஞ்சி விளையாடும் நடிகை அதிதி …!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்:-

கங்கனா சினிமாவில் அறிமுகமானது ஆதித்யா பஞ்சோலி (நெபோடிசம்) மூலமாகத்தான். கங்கனாவின் பாய்பிரண்ட்டான இவர் தான் இயக்குனர் அனுராக் பாசுவிடம் கங்கனாவை அறிமுகப்படுத்தினார். 

கேங்ஸ்டர் படம் மூலம் இவரை அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் மகேஷ் பட் (நெபோடிசம்). 

கங்கனாவின் முதல் ஹீரோவாக நடித்தவர் இம்ரான் ஹாஸ்மி (நெபோடிசம்). கங்கனாவின் திரையுலக பயணத்தில் சரிவு ஏற்பட்டபோது இவருக்கு தனது கைட்ஸ் படம் மூலம் கைகொடுத்தவர் ஹ்ரித்திக் ரோஷன் (நெபோடிசம்). மீண்டும் ஒரு சரிவு ஏற்பட்டபோது மீண்டும் ‘க்ரிஷ்-3’ மூலம் கை கொடுத்தவரும் ஹ்ரித்திக் ரோஷன் (நெபோடிசம்) தான். 

ALSO READ  2 டோஸ் தடுப்பூசி போட்டாத்தான் மின்சார ரயிலில் போக முடியும்

கங்கனாவின் மேனேஜராக இருப்பது கூட அவரது சகோதரி ரங்கோலி, இதுவும் நெபோடிசம் தான்.

சுஷாந்த்தின் மரணத்துக்கு முன்பாக அவருக்கு உதவியதோ இல்லை, அவருடன் பேசியதோ கூட இல்லாத கங்கனா, அவரது மறைவுக்குப்பின் தனது சொந்த காரணங்களுக்காக எதிர்க்கும் பலரையும் நெபோடிசம் என்கிற பெயரில் விமர்சித்து வருகிறார். மொத்தத்தில் கங்கனா தீதி ஒரு நயவஞ்சகி (Hypocrate) என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் நக்மா.

நக்மாவின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு கங்கனா ரனாவத்தின் டீம் கங்கனா ரனாவத் (Team Kangana Ranaut) எனப்படும் ட்விட்டர் பக்கம் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Aarogya Setu ஆப்.. என்னென்ன வசதிகள் உள்ளது???

naveen santhakumar

Mostbet AZ-90 kazino azerbaycan Ən yaxşı bukmeyker rəsmi sayt

Shobika

தேசிய காவல்துறை நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி..!

naveen santhakumar