இந்தியா

இளைஞரின் நேர்மைக்கு அமேசான் கொடுத்த பரிசு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமேசான் தளத்தை இந்தியாவில் அதிகளவு மக்கள் பயன்படுத்துகிறார், குறிப்பாக வீட்டு உபயோக பொருட்கள் முதல் ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை விற்பனை செய்துவருகிறது அமேசான் நிறுவனம்.

இந்நிலையில் கேரளாவில் ரூ.1400-க்கு ஆர்டர் செய்யப்பட்ட பவர் பேங்கிற்கு பதிலாக ரூ.8000 மதிப்பிலான மொபைல் டெலிவரி செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் ஒரு இன்ப அதிர்ச்சியையும் அளித்துள்ளது அமேசான் நிறுவனம்.

கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் நபில் நஷீத், இவர் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி அன்று அமேசான் தளம் மூலம் ரூ.1400 மதிப்புடைய பவர் பேங்க் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். பின்பு நபில் நஷீத்திற்கு கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் அன்று அமேசான் டெலிவரி செய்த பொருளை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ALSO READ  Mostbet AZ-90 kazino azerbaycan Ən yaxşı bukmeyker rəsmi sayt

அதாவது ரூ.1400 மதிப்புடைய பவர் பேங்க்கிற்கு பதிலாக நபில் நஷீத்திற்கு ரூ.8000 மதிப்புடைய redmi 8A Dual எனும் மொபைலை தவறுதலாக டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் வந்தவரை லாபம் என நினைக்காமல் நபில் தனது ட்விட்டர் வழியாக அமேசான் டேக் செய்து, “சுதந்திர தினத்தன்று எனக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியதற்கு நன்றி,நான் பவர் பேங்க் தான் ஆர்டர் செய்தேன், ஆனால் எனக்கு ரெட்மி மொபைல் வந்துள்ளது, இதை நான் என்ன செய்ய வேண்டும்??” சொல்லுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

ALSO READ  1 மணி நேரத்தில் ரிசல்ட்; விலை 400 ரூபாய்- கான்பூர் ஐஐடி உருவாக்கிய கருவி… 

இதை பார்த்த அமேசான் நிறுவனம் நீங்களே அதை உபயோகப்படுத்துங்கள் அல்லாது சுதந்திர தினத்திற்கு யாருக்காவது தானம் செய்யுங்கள் என்று அந்நபருக்கு  அமேசான் நிறுவனம் பதிலளித்தனர்.

இவரின் இத்தகைய நேர்மையான செயல், சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு டிரென்டாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பனி காலங்களில் ரயில் விபத்தை தடுக்க நடவடிக்கை..

Shanthi

Mostbet Kz Онлайн Казино Ресми Сайты Слоттар + Two Hundred And Fifty Fs Мостбет Кз Официальный Сайт

Shobika

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு 2 வாரம் ஜாமீன்?

Shanthi