இந்தியா

ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்; மோடி வாழ்த்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக தமிழக வம்சாவளி கமலா ஹாரிசும் பதவியேற்றுக் கொண்டனர். 78 வயதாகும் ஜோபைடன் அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபர் என்ற பெருமைக்குரியவர். 

இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இருநாட்டு உறவை மேலும் பலப்படுத்த ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கியுள்ளேன். சவால்களை எதிர் கொள்வதிலும், உலகளாவிய அமைதி, பாதுகாப்பை முன்னேற்றுவதிலும் ஒற்றுமையுடன் செயல்படுவோம்.

வளர்ந்து வரும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களில் இரு நாடுகளுக்கும் இடையே ஒற்றுமை உள்ளது என தெரிவித்துள்ளார். அதேபோல் துணை அதிபராக பதவி ஏற்றிருக்கும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கமலா ஹாரிஸ் பதவியேற்றது சிறப்புமிக்க தருணம் என தெரிவித்துள்ளார். 

ALSO READ  ரஜினியின் முடிவு குறித்து இயக்குனர் லிங்குசாமி கருத்து..!

#usa #joebiden #america #americapresident #kamalaharris #narendramodi #presidentjoebiden #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Apuestas Deportivas Perú 2022 Casas de Apuestas Per

Shobika

தாலி கட்ட வேண்டிய நேரத்தில் 11கி.மீ ஓடிய மணமகன்

Admin

மற்ற மாநிலங்களை போல புதுச்சேரி மக்களும் கஷ்டப்படக்கூடாது-ஆளுநர் தமிழிசை 

News Editor