இந்தியா

இந்தியாவில் இருப்பதே பாதுகாப்பானது என நாடு திரும்ப மறுக்கும் அமெரிக்கர்கள்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களை அழைத்து வர அமெரிக்க அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில், பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்தியாவில் இருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளுக்கு சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை கண்டிராத மோசமான நிலையை அமெரிக்கா தற்போது சந்தித்து வருகிறது.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களை அழைத்து வர அந்நாட்டு அரசு சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. இந்தச் சிறப்பு விமானங்கள் மூலமாக இதுவரை 50 ஆயிரம் பேர் அழைத்து வரப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ALSO READ  தமிழகத்தில் 29சதவீதம் சாலை விபத்துகள் குறைவு: அமைச்சர் நிதின் கட்காரி

இந்நிலையில் இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களை அழைத்துச் செல்ல அந்நாட்டு வெளியுறவுத்துறை சார்பில் தனி விமானம் அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் செல்வதற்காக இந்தியாவில் தங்கியிருக்கும் சுமார் 800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்களில் 10 பேர்  மட்டுமே அமெரிக்கா செல்ல ஒப்புக் கொண்டனர், மற்றவர்கள் இந்தியாவிலேயே இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 

ALSO READ  கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 95 வயது முதியவர் !

இந்தியாவில் சுமார் 24 ஆயிரம் அமெரிக்கர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களை அமெரிக்க மற்றும் இந்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அயோத்தியை வந்தடைந்தது புல்லட் ப்ரூஃப் வசதி கொண்ட ராமர் கோவில்….

naveen santhakumar

முதல் வகுப்பு படிக்கும் ராணா சர்வதேச மாடலிங் போட்டிக்கு தேர்வு

News Editor

10 Лучших Онлайн Казино В Казахстане Рейтинг Казин

Shobika