இந்தியா

ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு கூடுதலாக 3% அகவிலைப்படி உயர்வு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி:

ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு மேலும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது. ஏற்கனவே, 28 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் கூடுதலாக 3 சதவீதம் அதாவது 31 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்படும் என தெரிகிறது.

Good News For Govt Employees, Centre Finally Hikes Dearness Allowance For  Them to 28% | Details Inside

2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அப்போது 4 சதவீதம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 3 சதவீதம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 17 சதவீத அகவிலைப்படி அறிவிக்கப்பட்டது. அத்துடன் 11 சதவீதம் கூடுதலாக சேர்க்கப்பட்டு 28 சதவீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது ஜூன் மாதம் முதல் மேலும் 3 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

ALSO READ  பெண்களின் திருமண வயதை உயர்த்தியது ஏன்?… மோடி விளக்கம்!

இது ஒன்றிய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அனைவருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Букмекерская Контора Mostbet: Лучшие Коэффициенты И Опыт Ставок В Реальном времени Онлай

Shobika

நாடு முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.. 

naveen santhakumar

பேருந்துகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன??????

naveen santhakumar