இந்தியா

அதிபர் ட்ரம்ப்க்கு இந்தியாவில் என்ன வேலை… இதற்காகவா வருகிறார்?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியா வருவதால் அமெரிக்க அதிபருக்கு என்ன லாபம் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. ஏனென்றால்? நீண்ட பயணங்களை விரும்பாதவர் என்று அறியப்படும் டிரம்ப், இந்திய பயணத்தில் ஆர்வம் காட்டுவது ஏன் ? விளக்குகின்றது தமிழ் திசையின் இந்த தொகுப்பு…

1.அமெரிக்க வாழ் இந்திய வாக்காளர்களை கவர்வதற்கா?
இந்தியாவில் கடினமான கேள்விகள் கேட்கப் படாது என்பதால் ட்ரம்ப்க்கு இது புதிய அனுபவமாகவும் சந்தோஷமான பயணமாகவும் இருக்கலாம்.

2.அமெரிக்க அதிபர் தேர்தல் வர இருப்பதால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்த பயணத்தை டிரம்ப் மேற்கொள்கிறார் என்று கருதப்படுகிறது. 2016ல் நடந்த அதிபர் தேர்தலில் வெறும் 16 சதவீத அமெரிக்க வாழ் இந்தியர்களே டிரம்பிற்கு வாக்களித்தனர் என்று  புள்ளிவிவரங்கள் கூறுகின்றது.

ALSO READ  காதலை விட மறுத்ததால் பெண் உயிருடன் எரித்து கொலை..!

3.வர்த்தக ஒப்பந்தம் வரி குறைப்பு சம்பந்தமாக பேசப்படும்?

இந்தியா – அமெரிக்கா இடையேயான இருதரப்பு ஒப்பந்தம் 160 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.டிரம்பின் இந்திய வருகையின் முக்கிய நோக்கம் பல நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடத்தான் என்று கூறப்படுகிறது. இந்தியா, அமெரிக்கா இரு நாடுகளுமே தங்கள் வர்த்தம் உயர வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதால், பிரச்சனைகளை தீர்த்து கொள்ள இந்தப் பயணம் சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4. பாதுகாப்பு

டிரம்ப் இந்தியா வரும்போது, பாதுகாப்பு தொடர்பாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. கடற்படைக்காக அமெரிக்காவிடம் இந்தியா வாங்க உள்ள ஹெலிகாப்டர் தொடர்பான ஒப்பந்தமும் இதில் பேசப்படலாம். ரஷ்யா மற்றும் பிராண்ஸ் நாடுகளில் இருந்து பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியுள்ள இந்தியா, இதுவரை அமெரிக்காவிடம் இருந்து பெரிய ஏதும் வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ALSO READ  Mostbet Uzbekistan Официальный сайт спортивных ставок и онлайн-казино UZ 202

5 டிரம்ப்-மோடி நட்பு

கடந்த 8 மாதங்களில் அமெரிக்க அதிபர் டிரம்பும், இந்தியப் பிரதமர் மோதியும் ஐந்தாவது முறையாக சந்திக்கவுள்ளனர். இருவரும் ஒருவரையொருவர் ‘நண்பர்’ என்று அழைத்துக் கொள்கிறார்கள். இருவரும் அணைத்துக் கொள்வது போன்று பல புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகினஇந்தியா எங்களை சரியாக நடத்துவதில்லை. ஆனால், பிரதமர் மோதியை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று சில நாட்களுக்கு முன்னர் டிரம்ப் கூறியிருந்தார்.

டிரம்பின் வருகைக்குப் பிறகுதான் எது போன்ற வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன என்றும், இந்தியாவிற்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து நாடு மீண்டும் கிடைக்குமா பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தெலுங்கானாவில் அதிகாரிகளின் அலட்சியத்தால் காட்டுப்பன்றிகளுக்கு உயிருடன் இரையான குழந்தை…

naveen santhakumar

லட்சத்தீவை கைப்பற்றும் பாஜக..!

News Editor

விஷபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொத்தவிட்டு கொன்ற கொடூர கணவன் கைது..

naveen santhakumar