இந்தியா

பொது இடங்களில் புகையிலைப் பொருள்களை மென்று துப்பினால் 6 மாதம் சிறை…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாட்னா:-

பொது இடங்களில் புகையிலை அல்லது புகையிலைப் பொருள்களை மென்று துப்பினால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பீகார் அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதன் ஒருபகுதியாக பீகார் அரசு பொது இடங்களில் புகை இலை அல்லது வாசனைப் பொருட்களை மென்று துப்பினால் 6 மாத சிறை அல்லது 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ALSO READ  தூக்கில் தொங்கிய பாஜக எம்.பி 

பொது இடங்களில் புகையிலையை மென்று துப்பினால் யானைக்கால், காச நோய், பறவைக் காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும் வைரஸ்கள் பரவுகின்றன.

இதைத் தடுக்கும் நோக்கில் பான் மசாலா உள்ளிட்ட அனைத்து விதமான புகையிலைப் பொருள்களையும் மென்று பொது இடங்களில் துப்புவது இந்திய தண்டனைச் சட்டம்  (IPC) 268 மற்றும் 269 இன் படி தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  مراهنات كرة القدم اون لاين أفضل مواقع مراهنات رياضي

பீகாரில் ¼ பங்கினருக்கு (25.9 %) புகையிலை உபயோகிக்கும் பழக்கம் உள்ளதால் இந்த உத்தரவை நிறைவேற்றுவது அரசு அதிகாரிகளுக்கு சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.

பீகாரின் வடக்கு பகுதியில் உள்ள  வைஷாலி, சமஸ்டிப்பூர் மற்றும் சீதாமர்ஹிஆகிய மாவட்டங்கள் அதிக அளவில் புகையிலை தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஸ்க்ரப் டைபஸ்- இந்தியாவை மிரட்டும் புது வைரஸ்…! 

naveen santhakumar

கார் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுவன் : பதறவைக்கும் சிசிடிவி காட்சி

naveen santhakumar

22 சதவீத பணிகள் மட்டுமே செயல்பட்டது சபாநாயகர் ஓம்பிர்லா குற்றச்சாட்டு

News Editor