இந்தியா

ஊரடங்கு நேரத்தில் டியூஷனுக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் மொத்த போலீஸ் படையையும் டியூஷனுக்கு கூட்டிச் சென்ற 5 வயது சிறுவன்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சண்டிகர்:-

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பஞ்சாப் அருகே Tutionக்கு போ என பெற்றோர்கள் வற்புறுத்தியதால் சாலையில் நின்றுகொண்டிருந்த போலிஸிடம் புகார் செய்து. ஒட்டுமொத்த போலிஸ் படைகளையும் டியூஷன் எடுத்த வீட்டிற்கு அழைத்து வந்த சிறுவனால் பரபரப்பு.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் நபரொருவர் ஊரடங்கு நேரத்தில் இரண்டு சிறுவர்களை அழைத்துக்கொண்டு வெளியே சென்று கொண்டிருந்தார். இதை கண்ட அவரை தடுத்து நிறுத்த போலீசார் காரணம் கேட்டனர். 

அப்போது அங்கே இருந்த குருதாஸ்பூர் மாவட்ட  துணை காவல் கண்காணிப்பாளர் குருதிப் சிங்கிடம் 5 வயது சிறுவன் ஒருவன் இந்த ஊரடங்கு நேரத்தில் ஊரடங்கு முறையாக கடைபிடிக்காமல் நபரொருவர் டியூஷன் எடுத்து வருவதையும் அதற்கு தான் தங்களை அழைத்து செல்வதையும் போலீசாரிடம் கூறினான்.

அந்த நபர் எவ்வளவு பேசக்கூடாது என்று தடுத்தும் சிறுவன் எதையும் கண்டுகொள்ளாமல் அனைத்தையும் போலீசாரிடம் கூறினான். அதோடு போலீசாரையும் டியூஷன் எடுக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றான்.

ALSO READ  பெண்களின் துணிகளை சொந்த செலவில் துவைத்து சலவை செய்ய வேண்டும் - பீஹார் மாநில நீதிமன்றம் தீர்ப்பு

வீட்டிற்கு அழைத்து சென்றதோடு வெளியே இருந்து தனது ஆசிரியரையும் குறிப்பிட்டுள்ளான். வெளியே வந்து கதவை திறந்து பார்த்த ஆசிரியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது ஏனெனில் மொத்த போலீஸ் படையும் அங்கே குவிந்து இருந்தது. 

துணை காவல் கண்காணிப்பாளர் குர்திப் சிங் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் ஊரடங்கு நேரத்தில் உங்களுக்கு டியூஷன் எடுப்பதற்கு யார் அனுமதி அளித்தார்கள் என்று சரமாரியாக கேள்விகளை கேட்டார். இதையடுத்து வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் இதுபோன்ற செயல்களை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினார். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டார்.

ALSO READ  கோயில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய இஸ்லாமிய அமைப்புகள்.... நெகிழ்ச்சி சம்பவம்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குடியரசு தின விழாவில் கவனம் ஈர்த்த 17அடி உயரம் கொண்ட கம்பீர அய்யனார் சிலை

Admin

பேரதிர்ச்சி… விண்வெளி ஆராய்ச்சி மையத்தையும் விட்டு வைக்காத கொரோனா!

naveen santhakumar

கொரோனா பரவல்: வடகிழக்கு மாநிலத்தவற்கு எதிரான மனோநிலை… மன்னிப்பு கோரிய கேப்டன்….

naveen santhakumar