இந்தியா

பிரிட்டன் விமான சேவைக்கான தடையை நீடித்தது : மத்திய அரசு 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரிட்டனில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் அதிகம் பரவிவருவதால் மத்திய அரசு பிரிட்டன் விமான சேவைக்கான தடையை நீடித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின்  வூஹான்     மாகாணத்தில் தொடங்கிய கொரோனா  வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள். இந்த நிலையில் தான் பிரிட்டனில் தற்போது பரவி வருகிறது புது வகையான கொரோனா  வைரஸ்.

அதனைத் தொடர்ந்து பிரிட்டனிலிருந்து பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மனி, கனடா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளுக்கு பிரிட்டன் விமானம் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. புது வைரஸ் கட்டுப்பாட்டை மீறி இருப்பதால் மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பு இருக்க வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 

ALSO READ  மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று;ஆரம்ப சுகாதார நிலையம் மூடல் !

அதனையடுத்து பிரிட்டனில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் டிசம்பர் 31-ஆம் தேதி வரை தடை விதித்திருந்த நிலையில் தற்போது அந்த தடையை மேலும் நீடித்துள்ளது மத்திய அரசு. அதன்படி வரும் ஜனவரி 7 ஆம் தேதி வரை பிரிட்டனுக்கு விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவின் தாக்கம் குறையாததால் கர்நாடகாவில் ஜூன்-14 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு….

Shobika

நாடாளுமன்ற இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு

News Editor

கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள்..

Shanthi