இந்தியா

மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு – ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக வழங்கி வந்த இலவச உணவு தானியங்களை மேலும் 4 நான்கு மாதங்கள் வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

PMGKY:Govt Can Extend Scheme Date,needy Can Get Free Ration Till March -  PMGKY: अगले साल मार्च तक गरीबों को मिल सकेगा 5 किलो मुफ्त राशन, योजना की  अवधि बढ़ाने की प्लानिंग |

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ள 26 மசோதாக்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி நவம்பர் 30-ம் தேதியுடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த பிரதமர் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் (PMGKAY), மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல்: இனி M.Phil படிப்புகள் நிறுத்தம், உயர்கல்விக்கு இடையே விடுப்பு! - மத்திய அரசு... 

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராஜ் தாகூர்,

ஏழை, எளிய மக்கள் ரேஷனில் 5 கிலோ உணவு தானியங்களை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தால் சுமார் 80 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்திற்காக மேலும் 53,344 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

ALSO READ  சீக்கிரம் போய் தடுப்பூசி போடுங்க இல்லாட்டி அபராதம் 15000 ரூபாய் கட்டணும்

மத்திய அரசின் இந்த அறிவிப்பினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் அதிக அளவில் பயனடைவார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1xbet 1хБет букмекерская контора БК 1xbet Ставки на спорт онлайн Вход на Официальный сай

Shobika

ஜூன் 8 முதல் ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட் திறப்பு: புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு..

naveen santhakumar

பவானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தல் – மம்தா பானர்ஜி போட்டி

News Editor