இந்தியா

ஜனநாயகத்தைமதிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ………உச்சநீதிமன்றம்!!!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜனநாயக நாட்டில் சட்டத்தை மதிக்க வேண்டிய மாநில அரசின் கடமை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு தீர்ப்பாயங்களில் பணியாளர்கள் நியமிக்கப்படாததாள் அவை‌ முடங்கிக்கிடைக்கின்றன.

இதனால் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி தீர்ப்பாயங்களில் பணியார பணியாளர்களை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த கடந்த 4ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தீர்ப்பாய பணியாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியத்துடன் செயல்படுவதாகu கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணுமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரித்த தலைமை நீதிபதி திரு என்.வி. ரமணா நீதிபதிகள் திரு சந்திரசூட், திரு நாகேஸ்வரராவ் ஆகியோர் பணியாளர் தீர்ப்பாய விவகாரத்தில் மத்திய அரசு ஏனோ தானோ என்று பொருப்பற்ற நிலையில் செயல்பட்டதாக குற்றம் சாட்டினார் .

கொரோனா காலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாடு முழுவதும் சென்று நேர்முகத் தேர்வு நடத்தி பணியாளர்களை தேர்வு செய்ததாக கூறிய நீதிபதி ஆனால் அவர்கள் ஒரு சிலரையே மத்திய அரசு நியமித்துள்ளதாக தெரிவித்தார் இதனால் தங்களின் நேரம் வீணடிக்கப்படுவதாக அவர் கூறினார் .

ALSO READ  ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போன் வெடித்து சிதறல் - ஒன்பிளஸ் விளக்கம்

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் வழக்கறிஞர் பணியாளர்களின் நியமன விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பதாக சுட்டிக்காட்டினார். இதற்கு அதிருப்தி தெரிவித்த தெரிவித்த நீதிபதிகள் உச்சநீதிமன்ற தேர்வு செய்தவர்களை மத்திய அரசு மதிக்கவில்லை என்றார்.

ALSO READ  முகக்கவசம் அணியாவிட்டால் ஒரு லட்சம் அபராதம்; வெளியே சுற்றினால் இரண்டு ஆண்டு சிறை- அரசு அதிரடி….

தேர்வு கமிட்டிக்கு என்ன மதிப்பு இருக்கும் என கேள்வி எழுப்பினார் இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை துரதிஷ்டவசமானது என தெரிவித்த நீதிபதிகள் ஜனநாயக நாட்டில் சட்டத்தை மதிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் உண்டு எனக் கூறினார்.

அனைத்து தீர்ப்பாயங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களை 2 வாரங்களுக்குள் முழுமையாக நிரப்ப மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நீதிமன்றமே அந்த இடங்களை நிரப்பும் என கூறி வழக்கை ஒத்திவைத்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மிரட்டும் கொரோனா; ஒரே நாளில் 22 ஆயிரம் பேர் பாதிப்பு !

News Editor

“பெண்களின் சாதனைகளில் இந்தியா பெருமை கொள்கிறது”; மோடி வாழ்த்து !

News Editor

சமாதியில் இருக்கும் சாமியார் உயிருடன் திரும்புகிறாரா?

Admin