இந்தியா

கொரோனா காலத்தில் தவறாமல் கடன் தொகை செலுத்தியவர்களுக்கு ஊக்கத்தொகை :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி : 

ரூ. 2 கோடி வரையிலான கடன்களுக்கு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை தவறாமல் கடனுக்கான தவணை செலுத்தியவர்களுக்கு சாதாரண மற்றும் கூட்டு வட்டிக்கு இடையிலான வித்தியாசத்தை ஊக்கத் தொகையாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை அடுத்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கோடிக்கணக்கான மக்களுக்கு வருவாய் இழப்பை ஏற்பட்டுள்ளது. 

வங்கிக்கடன் பெற்றவர்கள் மாதத் தவணையை செலுத்த முடியாமல் அவதிக்கு ஆளாகினர். இதையடுத்து 6 மாதங்களுக்கு தவணை காலத்தை நீட்டித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. 

ALSO READ  பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை! 

இதைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட தவணை காலத்திற்கு வட்டிக்கு வட்டி விதிக்கக் கூடாது என்று கூறி உச்சநீதிமன்றத்தில வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து ரூ. 2 கோடி வரையிலான கடன்களை பெற்று தவணை நீட்டிப்பு கோரியுள்ள வாடிக்கையாளர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. 

இந்த நிலையில் 6 மாத தவணை நீட்டிப்பை தேர்வு செய்யாத கடன்தாரர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்க ரிசர்வ் வங்கி ஆளுமையின் கீழ் உள்ள வங்கிகளுக்கு நிதியமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரையிலான 6 மாத தவணை செலுத்தியவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கான சாதாரண மற்றும் கூட்டு வட்டிக்கு இடையிலான வித்தியாசத்தை ஊக்கத் தொகையாக வழங்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1win Aviator Game Down Load Apk For Free Play Online Inside Indi

Shobika

“ரிபப்ளிக்” அர்னாப் கோஸ்வாமி ஜாமீனில் விடுதலை:

naveen santhakumar

சிறுத்தையை சிதறவிட்ட பெண்மணி – பரபரப்பு வீடியோ …!

News Editor