இந்தியா

கிரிப்டோகரன்சிக்கு தடை – மத்திய அரசு திட்டம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தனியார் கிரிப்டோ கரன்சியை தடை செய்யும், ரிசர்வ் வங்கி மூலம் அதிகாரப்பூர்வ கிரிப்டோகரன்சியை உருவாக்கவும் வழிவகை செய்யும் சட்ட மசோதாவை நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Centre to ban Cryptocurrency: Will there be new digital currency? What are  the prices of Bitcoin, Ethereum after fall in value? All FAQs Answered

தனியார் கிரிப்டோகரன்சிகளால் ஆபத்து இருப்பதாக ஏற்கெனவே ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரித்திருந்தார். தற்போது கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயம் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. 2009ம் ஆண்டு பிட் காயின் வருகைக்கு பின்னர் கிரிப்டோகரன்சிகளின் வளர்ச்சி அபரிமிதமானது.

அப்போது நூறு ரூபாய்க்கும் குறைவாக இருந்த ஒரு பிட் காயின் (Bitcoin) மதிப்பு தற்போது 50 லட்சத்துக்கும் மேல். ஆனால் இத்தகைய கரன்சிகள் மூலம் டார்க் வெப்பில் போதைப்பொருள் விற்பனை, ஆயுத விற்பனை போன்றவையும் அதிகரித்து வருகிறது.

ALSO READ  பாராளுமன்றத்தின் புதிய கட்டிடம்-உச்சநீதிமன்றம் அதிருப்தி

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் சொந்த டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவதற்கு மத்திய அரசு திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 29ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் மொத்தம் 26 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ALSO READ  போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமாக கருத கூடாது- சமூக நீதி அமைச்சகம் பரிந்துரை!

அதில், கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய கட்டுபாடு மசோதா 2021 (The Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021) என்ற மசோதாவும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் இந்த முடிவால் அனைத்து முக்கிய டிஜிட்டல் கரன்சிகளின் பங்குகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பிட்காயின் சுமார் 18.53 சதவிகிதம், எத்திரியம் 15.58 சதவிகிதம் மற்றும் டெதர் 18.29 சதவிகிதம் வரை அதன் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸின் முழு ஜீனோம் வரிசைகளையும் De-Code செய்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை….

naveen santhakumar

ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட தந்தை, மகன்..

naveen santhakumar

மும்பை-புதுக்கோட்டை….மகனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க ஸ்கூட்டரில் பயணம் செய்த தம்பதி:

naveen santhakumar