இந்தியா

2020-ஆம் ஆண்டிற்கான குடிமைப் பணி தேர்வு முடிவுகள் வெளியீடு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2020-ஆம் ஆண்டிற்கான இந்திய குடிமைப் பணி இறுதித் தேர்வின் முடிவுகளை வெளியிட்டது, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

2020 ஆம் ஆண்டின் குடிமைப் பணி தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம்  வெளியிட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் இருந்து 761 பேர் குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களில் 545 ஆண்களும், 216 பெண்களும் அடங்குவர்.

யூ.பி.எஸ்.சி சார்பில் ஆண்டுதோறும் இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு நடத்தப்படுகிறது. இளங்களை பட்டப்படிப்பை முடித்திருப்பதே இத்தேர்விற்கான அடிப்படைத் தகுதியாகும். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகைக் கொண்டதாகும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., குரூப்A, குரூப்B, முதலிய பணிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

ALSO READ  Kasyno Mobilne Grać Na Automatach Onlin

இத்தேர்வில் ஐஐடி மும்பையில் பிடெக் சிவில் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்ற சுபம் குமார் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை ஜக்ரதி அவஸ்தியும் மூன்றாம் இடத்தை அங்கிதா ஜெயினும் பெற்றுள்ளனர். தமிழகத்திலிருந்து 40 பேர் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிவுகளை https://upsc.gov.in/sites/default/files/FR-CSM-20-engl-240921-F.pdf என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அலட்சியப் போக்கால் தங்க நகைகளை குப்பையில் வீசிய பெண் :

naveen santhakumar

இரண்டு மகன்களை கொன்ற தந்தை..! மனைவியால் நேர்ந்த கொடூரம் …!

News Editor

பிரதமர் மோடிக்கு வங்கதேச பிரதமர் அனுப்பிய 2.6 டன் மாம்பழங்கள்!

naveen santhakumar