இந்தியா

“நவ் பாரத் உதயான்-ல் அமையவிருக்கும் கட்டிடத்தை வடிவமைக்க யோசனை அளிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 5 லட்சம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி : 

சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டை குறிக்கும் வகையில் டெல்லியின் “நவ் பாரத் உதயானில்” அமைய இருக்கும்  பிரம்மாண்ட கட்டிடத்தின் வடிவமைப்புக்கான யோசனைகளை வரவேற்று மத்திய பொதுப்பணித் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், போட்டி ஒன்றை நடத்துகிறது.

இந்திய மக்கள் மற்றும் நிறுவனங்கள் மட்டும் பங்குபெறும் வகையில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் கட்டிட வல்லுநர்கள், கட்டிட நிறுவனங்கள், மாணவர் குழுக்கள், கட்டிடம் மற்றும் திட்டமிடல் பள்ளிகள் / கல்லூரிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள இதர நிறுவனங்கள் தனித்தனியாகவோ அல்லது இணைந்தோ பங்குபெறலாம்.

ALSO READ  நாளை முதல் 2,000 பேருந்து சேவைகளை இயக்கம்- மாநகர போக்குவரத்துக் கழகம்..!

இதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சமும்,மேலும் ஐந்து ஊக்கப் பரிசுகளாக ஒவ்வொருவருக்கும்  தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும்.இதன் முக்கிய அம்சங்களை விளக்கும் வகையில் இணையக் கருத்தரங்கம் ஒன்று 2020 நவம்பர் 17 அன்று நடத்தப்படும்.

இந்தப் போட்டியில் கலந்துகொள்ள பதிவு செய்து கொள்ள வேண்டிய கடைசி நாள் 2020 டிசம்பர் 11 ஆகும். வடிவமைப்பை 2020 டிசம்பர் 11 அன்று மாலை 7 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.தேவைப்படின், இப்போட்டியின் நீதிபதிகளின் முன் 2020 டிசம்பரின் இரண்டாம் பாதியில் விளக்கமளிக்க வேண்டியதாக இருக்கும். டிசம்பர் மாத கடைசி வாரத்தில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Pin Upward Türkiye Giriş Resmi Site Casino Bahis Ve Spor Bahisler

Shobika

பி.எம்.கேர்ஸ் நிதி மூலம் ஆக்சிஜன் ஆலை நிறுவப்படும் ; பிரதமர் மோடி பேச்சு !

News Editor

யானையின் மீது யோகா சாகசத்தின் போது கீழே விழுந்த பாபா ராம்தேவ்:

naveen santhakumar