இந்தியா

யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி போட்டி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லக்னோ:

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக வரும் சட்டசபை தேர்தலில் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாக்கூர் போட்டியிடப் போவதாக அமிதாப் தாக்கூரின் மனைவி நூதன் அறிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் காவல்துறையில் உயர்அதிகாரியாக அமிதாப் தாக்கூர் பணியாற்றி வந்தார். கடந்த 2017ம் ஆண்டில் அமிதாப் தாக்கூர் பணியாளர் நிலையை மாற்றி அமைக்குமாறு மாநில அரசை வலியுறுத்தினார். அமிதாப் தாக்கூரின் பணிக்காலம் வரும் 2028ம் ஆண்டு வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
Compulsory Retirement Given to 3 IPS Officers of UP Including IPS Amitabh  Thakur - Global Governance News- Asia's First Bilingual News portal for  Global News and Updates

இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 23ம் தேதி, பொது நலன் அடிப்படையில் காவல்துறை உயர்அதிகாரி அமிதாப் தாக்கூருக்கு கட்டாய ஓய்வு அளித்து உத்தரவிட்டது.

கட்டாய ஓய்வு அளிக்க பட்ட ஐ பி எஸ் அதிகாரி அமிதாப் தாக்கூர் வரும் சட்டசபை தேர்தலில் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக போட்டியிடுவார் என அமிதாப் தாக்கூரின் மனைவி நூதன் அறிவித்துள்ளார்.

ALSO READ  4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு

வரும் சட்டசபை தேர்தலானது சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டமாக இருக்கும். தற்போது முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத் காலத்தில் ஜனநாயகமற்ற, முறையற்ற, அடக்குமுறை, துன்புறுத்தும் மற்றும் பாரபட்சமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, எனது கணவர் (அமிதாப் தாக்கூர்) வருகிற தேர்தலில் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் தொகுதியில், அவரை எதிர்த்து போட்டியிடுவார்’ என்று அமிதாப் தாக்கூரின் மனைவி நூதன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பரவல்; திமுக சார்பில் கபசுர குடிநீர் !

News Editor

கொரோனாவுக்கு எதிரான போருக்கு தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை …

naveen santhakumar

கமல்ஹாசன் – தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்

News Editor