இந்தியா

கொரோனா தடுப்பூசி இன்று முதல் துவக்கம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாடுமுழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடு பணியை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி.

சீனாவில் கடந்த நவம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் 8 கோடி பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 லட்சமாக இருக்கிறது.
இந்தியாவில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சீராகக் குறையத் தொடங்கியுள்ளது. 


இந்நிலையில் கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி உருவாக்கும் பணியில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டன. இதனிடையே ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழமும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய ‘கோவிஷீல்ட்’ என்ற தடுப்பூசியை, இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்து வருகிறது. அதேவேளை ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கியது. 

ALSO READ  பயணத்தை விரும்புகிறவர்கள் வடகிழக்கு இந்தியாவில் மிஸ் பண்ணக்கூடாத இடங்கள்


இதனையடுத்து மத்திய அரசு ‘கோவிஷீல்ட்’, ‘கோவேக்சின்’ இரண்டு தடுப்பூசிகளுக்கும் அனுமதி அளித்து, ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.   


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதுவையில் ஆளும் காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்; எதிர்க்கட்சி கடிதம்!

News Editor

கையை மீறிய கொரோனா; முழு ஊரடங்கை அமல்படுத்தியது மாநில அரசு !

News Editor

டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை

Admin