இந்தியா

பிரிட்டனில் இருந்து வந்த ஆந்திர பெண்ணுக்கு கொரோனா தொற்று..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கரோனா தற்போது மரபியல் மாற்றம் அடைந்து வீரியமிக்க கரோனா வைரஸின் புதிய வகை வேகமாக  பிரிட்டன் முழுவதும் பரவி வருகிறது . ஆகையால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறத்து பிரிட்டன் அரசு. உலகையே  தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை விட 70 % வேகமாக பரவுகிறது புதிய வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து இங்கிலாந்தின் தெற்கு பகுதிகளில் மீண்டும் கடுமையான  கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாற்றமடைந்த  புதிய வகை வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக பிரிட்டனிலிருந்து பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மனி, கனடா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளுக்கு பிரிட்டன் விமானம் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன, இந்த நிலையில்தான் பிரிட்டனில் தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  டிசம்பர் 22ஆம் தேதி இரவு 12 மணியிலிருந்து விமானங்கள் நிறுத்தப்படும், மேலும் 22 ஆம் தேதி இரவு பிரிட்டனிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா  வைரஸ் பரிசோதனைகள் செய்யப்படும் என மத்திய அமைச்சகம் கூறியிருந்தது.  

ALSO READ  2 மாத கர்ப்பிணி..3000 கிலோமீட்டரை 52 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ்..என்ன காரணம்???

அண்மையில் , லண்டனில் இருந்து டெல்லி வந்த 266 பயணிகளில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து  பிரிட்டனில் இருந்து வந்த ஆந்திர பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் ரயிலில் பயணித்தவர்களிடம் சுகாதார துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Azerbaycanda bukmeke

Shobika

1XBET Mobile APK Smartfon proqramını yükləy

Shobika

தாத்தா பிணத்தை பிரிட்ஜில் வைய்த்த பேரன்…கொலையா..???வறுமையா..???

Shobika