இந்தியா

கொரோனா தாக்கம் குறைந்தது ஓராண்டு காலம் நீடிக்கும்….விஞ்ஞானிகள் கருத்து…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:

பிரபல செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ், இந்தியாவில் கொரோனா 3-வது அலை எப்படி இருக்கும்..??? என்பது தொடர்பாக உலகெங்கிலும் உள்ள சிறந்த சுகாதார நிபுணர்கள், டாக்டர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்கள் என 40 பேரிடம் கருத்து கேட்டது.

OLYMPUS DIGITAL CAMERA

அதன்படி, இந்தியாவில் கொரோனா 3-வது அலை அக்டோபர் மாதத்தில் வீசக்கூடும் என பெரும்பாலானோர் கூறியுள்ளனர். சிலர் ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் வரக்கூடும் என தெரிவித்துள்ளனர்.ஆனால் 2-வது அலையை விட 3-வது அலை மத்திய, மாநில அரசுகளால் திறம்பட கையாளப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துவிடும் என்பதால் இயற்கையாகவே பொதுமக்களிடத்தில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுவிடும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

ALSO READ  Parimatch On Line Casino Polska Bonus +100% Za Pierwszy Depozyt

3-வது அலை, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டு வருவதில் விஞ்ஞானிகள் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனர். 40 பேரில் 14 பேர், ஆபத்து பொதுவானதுதான் என கூறியுள்ளனர். மேலும் இந்த கொரோனா அச்சுறுத்தல் குறைந்தது ஓராண்டு நீடிக்கும் என 30 பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதுச்சேரி பாஜக நியமன MLA மாரடைப்பால் காலமானார் :

naveen santhakumar

பழங்குடி செயற்பாட்டாளர் பாதிரியார் ஸ்டான் சுவாமி மறைவு

naveen santhakumar

9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு..!

News Editor