இந்தியா

கொரோனா பரவல்: பி.எஃப்.புதிய விதிமுறைபடி இனி பணம் எடுக்கலாம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி:-

தற்போது திருத்தப்பட்ட தொழிலாளர் வைப்பு நிதி-ன் (Employees’ Provident Fund (EPF)) புதிய விதிமுறைபடி தொழிலாளர்கள், தங்கள் பி.எஃப். கணக்கில் 75 சதவீதம் வரை அல்லது மூன்று மாத அடிப்படை சம்பளம், (அகவிலைபடியுடன் சேர்த்து) இவற்றில் எது குறைவோ அதை முன்பணமாக எடுத்துக் கொள்ளும் நடைமுறை அமலுக்கு வந்தது. 

அது தொடர்பாக தொழிலாளர்களுக்கு தொழிலாளர் அமைச்சகம் சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

பி.எஃப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், தொழிலாளர்கள், அதிகபட்சமாக மூன்று மாத அடிப்படை ஊதியத்தை பெறுவதற்கு வகை செய்வதற்கான அரசாணையை, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் மார்ச் 30ல் வெளியிட்டது. இதற்காக, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், 1952ம் ஆண்டின், தொழிலாளர் வருங்கால நிதி திட்ட விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது.

புதிய விதிமுறை, மார்ச், 28 முதல் அமலுக்கு வந்துள்ளதாக, தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  கொரோனா வைரஸால் இந்தியாவின் முதல் பலி....

கடந்த வாரம், மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், 1.70 லட்சம் கோடி ரூபாய் நிவாரண உதவி திட்டங்களை அறிவித்தார்.

ஒரு தொழிலாளர் தன் பி.எஃப்., கணக்கில் செலுத்தியுள்ள தொகையில், 75 சதவீதம் வரை அல்லது மூன்று மாத அடிப்படை சம்பளம், இவற்றில் எது குறைவோ, அதை, முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம். அத்தொகையை திரும்ப செலுத்தத் தேவையில்லை (non-refundable) எனவும் அறிவித்திருந்தார்.

ALSO READ  1xbet Türkiye Casino İncelemesi Bilgilendirici Ve Yardımcı

பிஎஃப் 75% அல்லது மூன்று மாத சம்பளத்தை பெற விரும்பும் தொழிலாளர்கள் கீழ்கண்ட இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் mem.epfindia.gov.in. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“spacewe

Shobika

‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற தென்னகத்து பெண்; உலக அழகி போட்டிக்கு தேர்வு !

News Editor

அடையாள அட்டையில் நாய் புகைப்படம்..அதிர்ச்சி அடைந்த வாக்காளர்

News Editor