இந்தியா

கொரோனா சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் கடன்- அள்ளிக் கொடுக்கும் வங்கிகள்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

கொரோனா சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் வரையில் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகள் அறிவித்துள்ளன.

Sell USDINR; Target Of: 74.80 - 74.70: ICICI Direct

கடந்த மே மாதத்தில் பல்வேறு பொதுத் துறை வங்கிகள் ரூ.5 லட்சம் வரையில் தனிநபர் கடன் வழங்கும் சிறப்புத் திட்டங்களை அறிவித்தன.

இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தனக்காகவும் தனது குடும்பத்தினருக்காகவும் கடன் பெற்று அதை சிகிச்சைகளுக்கு செலவு செய்யலாம். கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியபோது மத்திய ரிசர்வ் வங்கி இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

சம்பளம் பெறும் நபர்களுக்கு 6.85 சதவீதத்தில் தொடங்கி கடன் கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தது ரூ.25,000 முதல் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரையில் கடன் பெறலாம்.

ALSO READ  இளம்பெண்ணின் செயல் ; தீயாக பரவும் வீடியோ - விளக்கம் கேட்டு காவல்துறை நோட்டீஸ்

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எஸ்பிஐ கவாச் என்ற பெயரில் 8.5 சதவீத வட்டியில் ரூ.5 லட்சம் வரையில் கடன் வழங்குகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 8.5 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம் வரையில் கடன் கொடுக்கிறது. பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளும் கொரோனா சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் வரையில் கடன் வழங்குகின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சச்சினுக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு நீக்கம்

Admin

ஒரே நாளில் 50 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

News Editor

அனைத்தும் தனியார்மயம்- நிர்மலா சீதாராமன் ஐந்தாம் கட்ட அறிவிப்பு… 

naveen santhakumar