இந்தியா

மிரட்டும் கொரோனா; ஒரே நாளில் 22 ஆயிரம் பேர் பாதிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். இதுவரை 11 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் பாதித்துள்ளது. 26  லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். 

ALSO READ  'கபடதாரி' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,854 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 117 பேர் இந்த நோய் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய் தொற்றில் இருந்து 15,157 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த வாரம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Названы самые популярные соцсети в Казахстане ᐈ новость от 13:56, 05 декабря 2023 на zakon k

Shobika

விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்கள் : இந்திய விண்வெளி சங்கம் இஸ்பா துவக்கம்

News Editor

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு பிப்ரவரி 1ம் தேதி தூக்கு

Admin