இந்தியா

கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா ஐபிஎஸ் நியமனம்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெங்களூரு:-

கர்நாடக மாநில உள்துறை செயலாளராக ரூபா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் உயர் காவல் அதிகாரிகள் 17 பேரை அம்மாநில அரசு பணி இடமாற்றம் செய்துள்ளது. அதன்படி, ரயில்வே ஐ.ஜி.யாக இருந்த பெண் அதிகாரி ரூபா, உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

2000 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ரூபா (Roopa Divakar Moudgil) தற்பொழுது ரயில்வே ஐஜியாக உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் கர்நாடக மாநில உள்துறை முதன்மைச் செயலாளராக (Principal Secratary To Govt) நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியை ஏற்கும் முதல் பெண் அதிகாரி ரூபா தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்துறை முதன்மைச் செயலாளராக (PCAS) இருந்த 1995 ஆம் ஆண்டில் பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இருந்த உமேஷ் குமார், பொருளாதார குற்றப் புலனாய்வு துறையின் ஏ.டி.ஜி.பி.யாக பணிஇட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ALSO READ  சாயா & கிளியோபாட்ரா அரியவகை புகைப்படம்; இணையத்தில் வைரல்…

கர்நாடக சிறைத்துறை அதிகாரியாக ரூபா இருந்தபோது, சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்றதை கண்டுபிடித்தார். இது, பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந்த சர்ச்சை காரணமாக ரூபா இந்திய அளவில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Bonus Bez Depozytu Dla Polaków W Kasynach Online 202

Shobika

Топ 10 Лучших Онлайн Казино России И Украины На Реальные Деньг

Shobika

டிக்டாக் செயலிக்கு போட்டியாக இந்தியாவின் சிங்காரி செயலி… 

naveen santhakumar