இந்தியா

இனி கைலாஷ்-மானசரோவர் செல்வது ஈஸி- புதிய சாலை திறப்பு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உத்தர்கண்ட்:-

மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகரில் 80 கி.மீ நீளமுள்ள கைலாஷ் மானசரோவர் இணைப்பு சாலையை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

இதன் மூலம், பித்தோராகர் மாவட்டத்தின் வியான்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள இந்தோ-சீனா எல்லையில் உள்ள இந்திய பகுதி இப்போது நாட்டின் பிற பகுதிகளுடன் இந்த சாலை வழியாக தர்ச்சுலாவின் கட்டிபாகரிலிருந்து சீனாவின் எல்லைக்கு (Line Of Actual Control LAC) அருகிலுள்ள லிபுலேக் வரை இணைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை நீட்டிப்பினால், லிபுலேக் கணவாயிலிருந்து (Lipulekh Pass) கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் யாத்ரீகர்களுக்கு எளிதாகிவிடும். என்று திட்டத்தின் தலைமை பொறியாளர் விமல் கோஸ்வாமி கூறினார். 

சாலையை திறந்து வைத்த பின், ராஜ்நாத் சிங், “மானசரோவர் யாத்திரைக்கான இணைப்புச் சாலையை இன்று திறந்து வைப்பதில் மகிழ்ச்சி. Broad Roads Organisation (BRO) தர்ச்சுலாவிலிருந்து (Dharchula) கைலாஷ்-மானசரோவர் யாத்திரை பாதை என அழைக்கப்படும் லிபுலேக் (சீனா எல்லை) வரை சாலை இணைப்பை ஏற்படுத்தியுள்ளது.” என ட்வீட் செய்துள்ளார். மேலும் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பித்தோராகர்-லிருந்து குன்ஜி (Gunji) வரை போக்குவரைத்தை தொடங்கி வைத்தார்.

ALSO READ  தோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு… 

B.R.O பொறியாளர்களின் பங்கைப் பாராட்டிய சிங், “பி.ஆர்.ஓ பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களை நான் வாழ்த்துகிறேன். அதன் அர்ப்பணிப்பு இந்த சாதனையை சாத்தியமாக்கியது. பி.ஆர்.ஓ குழு சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பெரிய பணிகளைச் செய்துள்ளது மற்றும் எல்லைப் பகுதிகளை இணைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.” என கூறியுள்ளார்.

ALSO READ  தமிழக ஊர்தி இடம்பெறாதது ஏன்?… முதல்வருக்கு ராஜ்நாத் சிங் கடிதம்!

இந்த சாலை நீட்டிப்பு 2020 ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.

புதிய சாலை நீட்டிப்பு குறித்து உள்ளூர்வாசிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த சாலை வியான்ஸ் பள்ளத்தாக்கிலுள்ள ஏழு கிராமங்களிலும் வசிப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். தர்ச்சுலாவிலிருந்து அவர்களின் உயரமான கிராமங்களை அடைய 5 நாட்கள் ஆகும். இப்போது 4 மணி நேரம் மட்டுமே ஆகும்.

இது மேல் இமயமலைப் பகுதிக்கு பழங்குடி மக்களின் குளிர்காலம் மற்றும் கோடைகால இடம்பெயர்வுக்கு உதவும். ஒட்டுமொத்தமாக இது எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் மற்றும் எல்லைப்புற கிராமங்களில் பொருளாதாரத்தை உயர்த்தும் என்று தர்ச்சுலாவைச் சேர்ந்த மக்கள் கூறினார்.

மேலும் இந்த பகுதி நாட்டின் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகிறது இந்த பகுதியை இந்தியா நேபாளம் சீனா ஆகிய மூன்று நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அவசர காலங்களில் ராணுவ போக்குவரத்துக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்

naveen santhakumar

ஜூலை 19 இல் துவங்குகிறது பாராளுமன்ற மழை கால கூட்டத் தொடர் …!

News Editor

சிமெண்ட் கலவை இயந்திரத்திற்குள் பதுங்கி பயணம் செய்த 18 பேர்.. போலீசார் அதிரடி….