இந்தியா

சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா அறிகுறி- ராஜீவ்காந்தி மருத்துவனையில் அனுமதி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் காய்ச்சல், சுவாசக்கோளாறு காரணமாக, ராஜீவ் காந்தி சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக ஜெயின் தனது ட்விட்டரில்:-

நேற்று இரவு எனக்கு அதிகப்படியான காய்ச்சல் ஏற்பட்டது. மேலும் ஆக்சிஜன் அளவு திடீரென குறைந்து போனது. இதையடுத்து ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். அடுத்தடுத்த நிகழ்வுகளை தொடர்ந்து அப்டேட் செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  பதவியேற்ற மூன்றே நாளில் ராஜினாமா செய்த அமைச்சர்:

இதனை ரீ-ட்விட் செய்துள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உங்கள் உடல்நலனில் அக்கறை காட்டாமல் 24 மணி நேரமும் பொது சேவையில் ஈடுபட்டு வந்துள்ளீர்கள். உடல்நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். விரைவில் குணமாகி வர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்

ALSO READ  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தலைமை தேர்தல் ஆணையம் எச்சரிக்கை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவருக்குத் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது சத்யேந்தர் ஜெயினுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சத்யேந்தர் ஜெயிலுக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர் இரண்டு நாட்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டிய அவசரக் கூட்டத்தில் இவர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீன் பிடிக்க தடை; மத்திய அரசு அறிவிப்பு !

News Editor

மாடு பிடிக்கும் நடிகர் வித்யூத் ஜம்வால்.. !

naveen santhakumar

வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருள்- தொடர்ந்து தீ கக்குவதால் மக்கள் பீதி…

naveen santhakumar