இந்தியா

போராடும் விவசாயிகள்; டெல்லியில் ஆணிகள் பதிக்கும் காவல்துறை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, இரண்டு மாதங்களுக்கும் மேல் விவசாய அமைப்புகள் போராடி வருகின்றனர். குடியரசு தினத்தன்று நடந்த ட்ராக்டர் பேரணியில் விவசாயிகளும் போலீசார்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. அதன் பின்னர் செங்கோட்டையில் மீது சீக்கியர்களின் புனிதக் கொடி ஏற்றப்பட்டது.

ALSO READ  'கோடியில் ஒருவன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

இந்த வன்முறையில் ஒரு விவசாயி உயிரிழந்தார்.மேலும் பலர் காயமடைந்தனர். இதன் காரணமாக டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் சிங்கு, காசிபூர், டிக்ரி போன்ற இடங்களில் இன்று இரவு வரை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக யாரும் உள்ளே நுழைந்து விடகூடாது என்பதற்காக டெல்லி காவல்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்தவகையில் டெல்லி எல்லையான காசிபூர், டிக்ரி இடங்களில் டெல்லி காவல்துறையினர் ஆணிகளை பதித்துவைத்துள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக மற்ற மாநிலத்திலிருந்து வருபவர்களை தடுப்பதற்காகவும், வன்முறைகளை தவிர்ப்பதாகக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என டெல்லி காவல்துறை தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“spacewe

Shobika

ஒரு நாளைக்கு 3 ‘சோப்’- 10 மணி நேரக் ‘குளியல்’ : விநோத பிரச்சனை

Admin

இந்திய-நேபாள எல்லையில் துப்பாக்கி சூடு !இந்தியர் ஒருவர் பலி, இருவர் காயம்…

naveen santhakumar