இந்தியா

இன்று முதல் மறுஉத்தரவு வரும் வரை பள்ளிகள் மூடல் – அரசு அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காற்று மாசு குறையாததால், ‌‌‌‌டெல்லியில் இன்று முதல் பள்ளிகள் மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Delhi: Schools to remain closed till further orders, says DoE | Education  News – India TV

தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், காற்றும் மாசு அதிகரித்திருக்கும் போது பள்ளிகளை எதற்காக திறந்தீர்கள் என டெல்லி அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.

மேலும், பெரியவர்களை வீட்டில் இருந்தே பணிபுரியக் கூறிவிட்டு குழந்தைகளை மட்டும் ஏன் பள்ளிக்கு வரக் கட்டாயப்படுத்துகிறீர்கள் எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதோடு, காற்று மாசுபாட்டை குறைப்பது குறித்து பக்கம் பக்கமாக பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யும் மத்திய மாநில அரசுகள் நடைமுறையில் எதையும் செய்யவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்..

ALSO READ  விவசாயிகளை சந்திக்க சென்ற எம்.பி.கள் டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தம்  !

இந்நிலையில், மறுஉத்தரவு வரும் வரை பள்ளிகள் மூடப்படுவதாகவும், நேரடி வகுப்புகள் நடைபெறாது என்றும் டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

எனினும், வாரிய தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், கற்பித்தல்-கற்றல் செயல்பாடுகள் ஆன்லைன் வழியே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆடைகளை கழட்டி மாதவிடாய் சோதனை.. பெண்கள் விடுதியில் அதிர்ச்சி சம்பவம்..

naveen santhakumar

【oficjalna Strona We Bonus W Pln

Shobika

Mostbet AZ-90 kazino azerbaycan Ən yaxşı bukmeyker rəsmi sayt

Shobika