இந்தியா மருத்துவம்

மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி – பிரதமர் நரேந்திர மோடி உறு‌தி..!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் நவீன மருத்துவ முறைகளுக்கும் இடையே உள்ள மிகப் பெரிய இடைவெளியை போக்கும் வகையில் புதிய தேசிய சுகாதார கொள்கை வரையறுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் சிபெட் – பெட்ரோ ரசாயனங்கள் தொழில்நுட்ப நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்று திறந்துவைத் தார். 

நாடு முழுவதும் சுகாதாரத் துறை வலுப்படுத்தப்படும். இதற்காக தூய்மை இந்தியா திட்டம், ஆயுஷ் மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார திட்டம் உள்ளிட்ட பல் வேறு திட்டங்கள் செயல்படுத் தப்படுகின்றன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் ராஜஸ்தானில் மட்டும் சுமார் 3.5 லட்சம் பேர் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர்.

மாநிலம் முழுவதும் 2,500 ஆரோக்கிய மையங்கள் தொடங்கப் பட்டுள்ளன.
இந்தியாவில் திறன்வாய்ந்த சுகாதார ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் கடின உழைப்பால், திறமையால் கொரோனாவை வெற்றி கரமாக எதிர்கொள்ள முடிந்தது. குறிப்பாக, இலவச தடுப்பூசி, அனைவருக்கும் தடுப்பூசி என்ற மத்திய அரசு திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

ALSO READ  பட்டப்பகலில் வங்கியில் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.11 லட்சம் கொள்ளை… 

இதுவரை 88 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு சவால்களுக்கு நடுவில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் நவீன மருத்துவ முறைகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இதை போக்கும் வகையில் புதிய தேசிய சுகாதார கொள்கை வரையறுக்கப்படும்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.

ALSO READ  தூங்கி விழுந்த உபர் ஓட்டுநர்… தானே காரை ஓட்டிய பெண் பயணி..!!!

சி.திவ்யதர்ஷினி


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிகரிக்கும் கொரோனா தொற்று; பீதியில் மக்கள் !

News Editor

ராகுல் காந்திக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பு?

Shanthi

“நன்றி சொல்ல வேண்டாம்,  நலமுடன் இருந்தாலே போதும்” : நரேந்திர மோடி 

News Editor