இந்தியா

கொரோனா: பீதியடைய வேண்டாம் சாதாரண காய்ச்சல் போன்றதுதான்- குணமடைந்தவர் கூறுகிறார்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது அதே சமயம் நோயாளிகள் பலர் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வருகின்றனர். இவர்களில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து தற்போது பூரணமாக குணமாகியுள்ளார் பெங்களூருவை சேர்ந்த வெங்கர ராகவா (Venkara Raghava) ஒருவர்.

இது குறித்து ராகவா கூறுகையில்:-

கொரோனா (Covid-19) மற்ற சாதாரண வைரஸ் காய்ச்சல் போன்றதுதான் எனவே மக்கள் பீதி அடையத் தேவையில்லை. 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த நான் தற்போது முழுமையாக குணமாகி விட்டேன். முழுமையாக நலம் பெற்றுள்ளதை என்னால் உணர முடிகிறது என்றார்.

மேலும், கூறிய ராகவா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு லண்டன் ஹீத்ரூ விமான நிலையம் வழியாக சென்றேன். அப்போது பல பயணிகளுடன் செல்லும் ஏற்பட்டது.   கடந்த மார்ச் எட்டாம் தேதி பெங்களூர் வந்து இறங்கினேன், லேசாக காய்ச்சல் ஏற்பட்டது.

ALSO READ  புனித் ராஜ்குமார் மறைவு : பெங்களூரில் 144 தடை உத்தவு!

 இதை எடுத்து என்னைத் தனிமைப் படுத்திக் கொண்டு அன்றைய தினமே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொண்டேன் கொரோனா பாதிப்பு உறுதியானது இதையடுத்து மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

எனது குடும்பத்தினருக்கு செய்யப்பட்ட பரிசோதனைகள் அவர்கள் யாருக்கும் தோற்று இல்லை என்று தெரியவந்தது.

ALSO READ  கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை; ஏமாற்றத்துடன் திரும்பும் பொதுமக்கள் !

கொரோனா வைரஸ் பாதித்தபோது சாதாரண காய்ச்சல் போன்று தான் உணர்ந்தேன். என்னை தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். நான் பீதியடையவில்லை. மற்ற நோயாளிகளை எப்படி மருத்துவர்களும், செவலியரும் பார்த்துக் கொள்வார்களோ அதுபோன்று கரோனா மருத்துவமனைகளில நிலைமை இருக்காது.

அதற்கு பதிலாக ஒருவரே உங்களை முழுமையாக கவனித்துக் கொள்வார். அப்படியே என்னை கவனித்துக் கொண்டனர். தற்போது நான் முழுமையாக குணமடைந்துள்ளேன். மக்கள் பீதியடைய வேண்டாம் எனக் கூறினார்.

இதுவரை இந்தியாவில் 1200க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் குணமாகி உள்ளனர். இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மது போதையில் வகுப்புக்கு வந்த 4 பிளஸ் 2 மாணவிகளால் பரபரப்பு

Admin

கழுதைகளுக்கு திருமணம் – மழை பெய்த சுவாரஸ்ய சம்பவம்!

Shanthi

சட்டமன்ற உறுப்பினர்களுக்காக பயிற்சி முகாம் !

News Editor