இந்தியா

போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமாக கருத கூடாது- சமூக நீதி அமைச்சகம் பரிந்துரை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சொந்த உபயோகத்திற்காக சிறிய அளவில் போதைப் பொருள் வைத்திருப்பதை குற்றமாக்கக் கூடாது என்று மத்திய சமூக நீதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.சிறிய அளவில் போதைப் பொருள் வைத்திருந்து பிடிபட்டவர்களை சிறையில் அடைக்காமல், அரசு மையங்களில் கட்டாய மறுவாழ்வு சிசிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது

Use anti-drug fund for de-addiction services, not just policing: Social  Justice Ministry - The Hindu

சுஷாந்த் சிங் மரணம் தொடங்கி போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சிக்கியுள்ளது வரை போதைப்பொருள் தொடர்பான விவகாரங்கள் பெரிதும் பேசுபொருளாகியிருக்கின்றன.

போதைப்பொருளுக்கு இளைஞர்கள், மாணவர்கள் அடிமையாகிறார்கள். ஆகவே கடுமையான சட்டங்களைக் கொண்டுவந்து அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் போதைப்பொருட்களை சப்ளே செய்யும் ஏஜெண்டுகளை தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது உள்ள போதை மருந்து சட்டம் (NDPS ACT) கடந்த 1985ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி அமலுக்கு வந்தது. 1989, 2001, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய சமூக நீதி அமைச்சகம் வருவாய் துறைக்கு ஆய்வறிக்கை ஒன்றினை அண்மையில் சமர்ப்பித்துள்ளது. அதில், ஒருவர் தனது தனிப்பட்ட உபயோகத்திற்காக சிற அளவில் போதைப் பொருள் வைத்திருப்பதை குற்றப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இதற்கு ஏற்ப போதை மருந்து ( Narcotic Drugs and Psychotropic Substances) சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

ALSO READ  இன்று இரவு 8 மணிக்கு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்..
Social Justice Ministry recommends decriminalising possession of small  amount of drugs for personal- The New Indian Express

மேலும், சிறிய அளவில் போதைப் பொருள் வைத்திருந்து பிடிபட்டவர்களை சிறையில் அடைக்காமல், அரசு மையங்களில் கட்டாய மறுவாழ்வு சிசிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

போதை மருந்து சட்டத்தில் திருத்தம் ஏதாவது செய்ய வேண்டுமா என்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சுகாதார அமைச்சகம், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) உள்ளிட்ட பல அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடம் வருவாய் துறை கடந்த மாதம் பரிந்துரை கேட்டிருந்தது.

ALSO READ  ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு

அதன் அடிப்படையில், மேற்கண்ட பரிந்துரைகளை சமூக நீதி அமைச்சகம் வழங்கியுள்ளது. தற்போது உள்ள போதை மருந்து சட்டம் (NDPS ACT) கடந்த 1985ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி அமலுக்கு வந்தது. 1989, 2001, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி, போதைப் பொருளை வைத்திருப்பது, விற்பனை செய்வது, இறக்குமதி செய்வது போன்றவை குற்றமாகும். போதைப் பொருளை பயன்படுத்துபவர்களுக்கு அவர்களிடம் இருந்து பிடிப்படும் போதைப்பொருட்களின் அளவை பொருத்து தண்டனை வழங்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இளைஞரின் நேர்மைக்கு அமேசான் கொடுத்த பரிசு:

naveen santhakumar

Букмекерские Конторы Без Паспорта И Нелегальные Бк Без Цупис Для Ставок На Спор

Shobika

“ஒரு கையில் துப்பாக்கியோடு மறுகையில் பாலோடும் அவர் ஓடி வந்த வேகத்தை வாழ்நாளுக்கும் மறக்க முடியாது!”- பால் வாங்கி தந்த போலீஸ்காரருக்கு குழந்தையின் தாயார் நன்றி.. 

naveen santhakumar