இந்தியா

24 மணிநேரத்தில் குஜராத்தில் இரண்டாவது நிலநடுக்கம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராஜ்கோட்:-

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று மதியம் 12:57 மணிக்கு 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.

குஜராத் ராஜ்கோட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

ராஜ்காட்டுக்கு வடமேற்கே 82 கிலோ மீட்டர் தொலைவில் கட்ச் பச்சாவ் பகுதியில் நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.4 பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்க மையப்பகுதி பச்சாவ் அருகே 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. 

24 மணி நேரத்திற்குள் ராஜ்கோட்டைத் தாக்கிய இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். ரிக்டர் அளவுகோலில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்று இரவு 8:13 மணிக்கு பதிவாகி உள்ளது.

ALSO READ  பா.ஜ.க மிரட்டல் மற்றும் கவர்ச்சி அரசியல் செய்கிறது : ஆம் ஆத்மி குற்றசாட்டு 

இதேபோல ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 4:30 மணியளவில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீருக்கு கிழக்கே 90 கி.மீ தூரத்தில் ஐந்து கி.மீ ஆழத்தில் கத்ரா பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இனி கர்ப்பிணிகளும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு…!

naveen santhakumar

வாழ்க்கையில் விரக்தி : ‘அட்லஸ் சைக்கிள்’ அதிபரின் மனைவி எடுத்த விபரீத முடிவு

Admin

மந்தார்மணி கடற்கரையில் கரை ஒதுங்கிய 36 அடி நீல திமிங்கலம்… 

naveen santhakumar