தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஜெய்ப்பூர்:-
இன்று அதிகாலை ராஜஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் இன்று அதிகாலை 5.24 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3ஆக பதிவானதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்தபடி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் தொடர்பான பாதிப்புகள் குறித்து உறுதியான தகவல் ஏதுவும் வெளியாகவில்லை, கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.