இந்தியா

வறுமை ஒரு தடையல்ல – ஆச்சரியமூட்டும் தம்பதி – டீக்கடை வருமானத்தில் 25 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரளாவைச் சேர்ந்த தம்பதிகள் தங்களுடைய டீக்கடை வருமானத்தின் மூலம் கடந்த 14 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 25 நாடுகளுக்கு சுற்றுலா சென்று வியப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.

Vijayan and Mohana Vijayan: Mohanlal meets the wanderlust old couple Vijayan  and Mohana; refers to them as 'an inspiration to all' | Malayalam Movie  News - Times of India

வாழ்க்கையில் வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள இடங்களையெல்லாம் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரச் சூழலினால் தம் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் இடத்திற்குக் கூட செல்ல முடியாமல் தவிப்பார்கள்.

இங்கு நம்முடைய சந்தோஷத்திற்கு எல்லாம் வறுமை ஒரு தடையில்லை எனவும், நம் கனவு தான் நம்மை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பதற்கேற்ப தன்னுடைய டீக்கடை வருமானத்தின் மூலம் உலகைச்சுற்றிக்கொண்டிருக்கின்றனர் கேரள தம்பதிகள்.

This tea shop owner couple has visited 16 countries, just one dream  destination left | Thaneliving.com

கேரள மாநிலம் கொச்சி அருகே காந்திநகர் பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருபவர்கே.ஆர் விஜயன் ( 71) மோகனா (69 ) தம்பதி.

Globe-trotting tea-seller couple now in New Zealand, 25th overall overseas  | Travel | Kerala | Manorama English

இவர்கள் இருவருக்கும் உலகைச்சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை சிறுவயது முதலே இருந்துள்ளது, ஆனால் இதற்குப் பணம் ஒரு தடையாக இருந்து வந்துள்ளது.

ALSO READ  கேரளாவில் நடந்த மகனின் இறுதி சடங்கை ஃபேஸ்புக் வழியாக பார்த்து கதறி அழுத பெற்றோர்....

இதனால் கடந்த 1963 ஆம் ஆண்டு டீக்கடை ஒன்றை ஆரம்பித்தார் விஜயன், இதன் மூலம் வரும் வருமானத்தைக்கொண்டு உலகத்தைச் சுற்றி வர முடிவு செய்தனர். இதற்காக இவர்களது கடையில் யாரையும் வேலைக்கு வைக்கவில்லை, இவர்களே முதலாளிகளாகவும் மற்றும் தொழிலாளியாகவும் இருந்து வருகின்றனர்.

தங்களுடைய டீக்கடை வருமானத்தில் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, தங்களுடைய சுற்றுப்பயணத்திற்காகச் சேமிக்க ஆரம்பித்தனர். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் சேர்த்து தற்போது தங்களுடைய கனவை நிறைவேற்றிவருகின்றனர்.

Brazil's snow to Peru's monsoon: Kerala tea shop couple's globetrot hits 23  countries | The News Minute

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கடைக்கு சிறிது விடுமுறைவிட்டு உலக நாடுகளுக்குப்பறக்க ஆரம்பித்தனர்.

vijayan and mohana who are roaming the world selling tea

இதுவரை சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து,நியூயார்க் , பிரேசில்,அர்ஜென்டினா, பெரு உள்ளிட்ட நாடுகளுக்குப் பறந்துள்ள இத்தம்பதிகள், இப்படி உலக நாடுகளைச்சுற்றியும் போது பல்வேறு கலாச்சாரங்களைத் தெரிந்துக்கொள்ள முடிகிறது எனவும் இதன் மூலம் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை வருவதாகவும் விஜயன் கூறியுள்ளார்.

ALSO READ  2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்...

கடந்த 14 ஆண்டுகளில் எங்களது உலக நாடுகளுக்கிடையேயான சுற்றுப்பயணம் இன்னும் முடியவில்லை. கொரோனா ஊரடங்கினால் இரண்டு ஆண்டுகள் எங்கும் செல்லாமல் இருந்த நிலையில் தற்போது வரும் அக்டோபர் 21 ஆம் தேதி ரஷ்யா செல்லத் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், இந்த முறை தங்களுடைய பேரக்குழந்தைகளுடன் பயணிக்க முடிவு எடுத்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் கே. ஆர். விஜயன்.

நாங்கள் இதுவரை 25 நாடுகளுக்குச்சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம், ரஷ்யா 26 ஆவது நாடு, ஆனால் நாங்கள் சென்றதிலே எனக்கு மிகவும் பிடித்தது சுவிட்சர்லாந்து தான் என்கிறார் மோகனா.

அதுமட்டுமல்ல, இந்த முறை ரஷ்யா செல்லும் போது அதிபர் விளாடிமிர் புதின் பார்க்க வேண்டும் என்பது இவர்களின் ஆசை. இவர்களின் வாழக்கை நிச்சயம் அனைவரும் முன் உதாரணமாகவே எடுத்துக்கொள்ளலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதுச்சேரியில் தொடர்ந்து  அதிகரிக்கும் கொரோனா தொற்று !

News Editor

Мостбет: бонусы на первый депозит и лучшие ставки на спор

Shobika

சீனாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட திபெத்தியர்கள்… 

naveen santhakumar