இந்தியா

கன்னடர்கள் மூச்சுவிட ஆக்சிஜன் வழங்குவது இல்லை- குமாரசாமி குற்றச்சாட்டு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெங்களூரு:-

இந்தியை தேசிய மொழியாக்க முயற்சி நடக்கிறது என்றும், கன்னடர்கள் மூச்சுவிட ஆக்சிஜன் வழங்குவது இல்லை என்றும் முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, குமாரசாமி தனது நீண்ட ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

கன்னட மொழி உணர்வை சீண்டி பார்த்தால் கன்னடர்கள் கிளர்ந்து எழுவார்கள் என்ற பதில் சீண்டியவர்களுக்கு (கூகுள்) கிடைத்துள்ளது. கன்னடம், கர்நாடகத்திற்கு கிடைக்க வேண்டிய நீதி நிறைய உள்ளது. கூட்டாட்சி தத்துவத்தில் வாழும் நாம், நமது உரிமைகளுக்காக, நமக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காக போராட வேண்டும்.

மத்தியில் ஆட்சி செய்த அனைத்து அரசுகளும் மறைமுகமாக இந்தி மொழியை திணிக்க முயற்சி செய்து வந்துள்ளன. கன்னடத்தை 3-ம் நிலை மொழியாகவே அவர்கள் பார்க்கிறார்கள். சமீபகாலமாக இந்திமொழி திணிப்பு முயற்சி தீவிரமாக நடக்கிறது. ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் இந்தியை தேசிய மொழியாக்க முயற்சி நடக்கிறது.

ALSO READ  பஞ்சாப் தேர்தலில் பஞ்சாக பறந்த பாஜக; 53 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் இமாலய வெற்றி..! 

மத்திய அரசில் வேலை பெற வேண்டுமென்றால் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. மத்திய அரசு மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சி செய்கிறார்கள். இது உள்ளூர் மொழிகளை ஒழிக்க நடக்கும் முயற்சி. இத்தகைய முயற்சிகளுக்கு எதிராக நாம் போராட வேண்டியது அவசியம். மத்திய அரசின் சேவைகள் கன்னடத்தில் கிடைப்பது இல்லை. நாடாளுமன்றத்தில் கன்னடத்தில் பேசினால் அதற்கு உரிய மதிப்பு இல்லை. மத்திய அரசின் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் கன்னடத்தில் பேசுவது இல்லை. ‘ஒரு நாடு ஒரு மொழி’ என்ற கொள்கையின் மூலம் இந்தியை ஒரு தேசிய மொழியாக மாற்ற முயற்சி நடக்கிறது.

ALSO READ  கைவிடப்பட்ட நாய் … சிக்கன் பில் மட்டும் ரூ.6000!! உணவளிக்க முடியாமல் திணறும் மாநகராட்சி!!...

நமக்கான ஜி.எஸ்.டி. பங்கு தொகை கிடைக்கவில்லை. கன்னடர்கள் மூச்சுவிட ஆக்சிஜன் வழங்குவது இல்லை. நோய்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குவது இல்லை. ஆனால் கர்நாடகத்திடம் இருந்து வரவேண்டியது இருந்தால் அதை வசூலிக்காமல் மத்திய அரசு விடுவது இல்லை. இவை எல்லாம் கன்னடத்தின் மீது நடைபெறும் தாக்குதல் இல்லாமல் வேறு என்ன.

தென்இந்தியாவில் கர்நாடகத்தை சேர்ந்த தேவேகவுடா பிரதமர் பதவியில் அமர்ந்தார். இதை இந்தி மொழி பேசும் தலைவர்கள் விரும்பவில்லை. அதனால் தேவேகவுடா எவ்வளவு வேதனையை அனுபவித்தார் என்பது ரகசியம் ஒன்றும் இல்லை என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

192 மாணவர்களுக்கு கொரோனா தொற்று; அதிர்ச்சியில் அரசு!

News Editor

போராடும் விவசாயிகளுக்கு வை-ஃபை : அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி..! 

News Editor

பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து

Admin