இந்தியா

டெல்லி கலவரத்தின்போது பொதுமக்கள் கலவர கும்பலிடம் இருந்து காப்பாற்றிய ‘ஹீரோ போலீஸ்’.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காஸியாபாத்:-

கடந்த வாரம் டெல்லியின் வட-கிழக்கு பகுதியில் நடைபெற்ற கலவரத்தின்போது 38 பேர் உயிரிழந்துள்ளனர் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி உத்தர பிரதேசம் காஸியாபாத் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதி எஸ்.பி. நீரஜ் குமார் ஜடாவ்ன் (Neeraj Kumar Jadaun) டெல்லி-உத்தர பிரதேச எல்லையில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்பொழுது திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது . நீரஜ் காவல் இருந்த பகுதியிலிருந்து 250 மீட்டர் தொலைவில் 40-50 பேர் கொண்ட கும்பல் கையில் ஆயுதங்களுடன் வந்து கொண்டிருந்தது. கும்பலில் சிலர் கையில் பெட்ரோல் குண்டுகளுடன் வீடு ஒன்றினுள் புகுந்தனர். இதைக்கண்ட நீரஜ் உடனடியாக ப்ரோட்டோகால்களை மீறி செயலில் இறங்கினார்.

ஏனெனில் கலவர கும்பல் நின்றிருந்த பகுதி டெல்லியை சேர்ந்ததாகும். ஒரு மாநிலத்தின் காவல் அதிகாரி மற்றொரு மாநிலத்திற்கு முறையான அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும். ஆனால் இந்த ப்ரோட்டோகால்கள் எதையும் கணக்கில் கொள்ளாமல் உடனடியாக களத்தில் குதித்தார் நீரஜ்.

ALSO READ  Pin Up 306 casino giriş qeydiyyat, bonuslar, yukl

உடனடியாக அந்த கலவர கும்பலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து நீரஜ் அந்த கும்பலிடம் துப்பாக்கி சூடு நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

உடனே நீரஜின் குழுவும் தாக்குதலுக்கு தயாராக இருந்தது. இதை கண்ட போராட்டக்காரர்கள் பின்வாங்க ஆரம்பித்தனர். அவர்கள் முழுமையாக பின்வாங்கும் வரையில் நீரஜ் தனது குழுவுடன் அங்கேயே இருந்தார்.

ALSO READ  கழுத்தளவு தண்ணீரிலும் கடமையை செய்த போலீசார்…

நீரஜின் இந்த தீர செயலை காவல்துறை அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இதனிடையே டெல்லி கலவரம் தொடர்பாக 125 FIRகள் பதியப்பட்டுள்ளது. இதுவரையில் 650 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புத்தாண்டை முன்னிட்டு ஜியோ அளித்த சலுகை..! கொண்டாட்டத்தில் வாடிக்கையாளர்கள்..!

News Editor

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Shanthi

வயிற்று வலியால் துடித்த இளைஞரின் வயிற்றை ஸ்கேன் செய்த போது காத்திருந்த அதிர்ச்சி:

naveen santhakumar