இந்தியா

போராடும் விவசாயிகளுக்கு வை-ஃபை : அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி..! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வேளாண் மசோதாவை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இலவச வை-ஃபை  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியில் உயிரை உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடங்கி இன்றுடன் 35 வது நாளை எட்டியுள்ளது.  

இந்தநிலையில், டெல்லியின் சிங்கு எல்லையில் போராடிவரும் விவசாயிகளுக்கு இலவச வை-ஃபை வழங்க, டெல்லி மாநில அரசு முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பாக, டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, “விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கும் வண்ணம் அவர்களுக்கு, வை-ஃபை வழங்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கட்சியும் முடிவெடுத்துள்ளது. நாங்கள் வை-ஃபை ஹாட்ஸ்பாட்டை நிறுவ சில இடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். தேவைப்பட்டால், வை-ஃபை ஹாட்ஸ்பாட் மேலும் பல இடங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளது.  

ALSO READ  33 வருட தொடர் போராட்டம்; கொரோனாவால் 10-ம் வகுப்பு தேர்ச்சி… 

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு, வேளாண் மசோதாவிற்கு எதிரான நிலைப்பாட்டையும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

#farmer_act #farmersuppot #chalodelhi #aravindkejirival #delhicm #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரே நாளில் 50 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

News Editor

இதில்….இந்த மாநிலத்திற்கு தான் முதலிடமாம்….மத்திய அரசு அதிரடி…!!

Shobika

İdman mərcləri və onlayn kazino 500 Bonus qazanın Giri

Shobika