இந்தியா

பதவியேற்று 7 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி ; கருப்பு தினமாக அனுசரித்த விவசாயிகள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய அரசு கொண்டுவந்துள்ள  வேளாண்  சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பலகட்ட  பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அணைத்து  பேச்சு வார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது.

இருப்பினும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டெல்லியில் விவசாயிகள் போராட தொடங்கி இன்றுடன் 6 மாதம் நிறைவடைந்து விட்டது. 

பிரதமர் மோடி தலைமையிலான அரசு முதல் முறையாக பதவியேற்ற 7 ஆம் ஆண்டின் தினத்தையொட்டியும் மே 26 ஆம் தேதியைக் கருப்பு தினமாக அனுசரிக்கப் போவதாக  பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டு அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா  அமைப்புகள் அறிவித்தது. விவசாயிகளின் இந்தக் கருப்பு தின போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளது. 

ALSO READ  டெல்லியிலிருந்து உ.பி. நோக்கி புறப்பட்ட பேருந்து கவிழ்ந்து பலர் படுகாயம்:

இந்நிலையில் டெல்லி எல்லையில் விவசாயிகள் இன்று (26.05.2021) கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல மாநிலங்களில் விவசாயிகள் இல்லங்களிலும் கருப்பு கொடி ஏற்று இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெண்மணி ஒருவர் கூறியதை கேட்டு உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிய பிரதமர் மோடி..!!!!

naveen santhakumar

கொரோனா: தூய்மையடையும் இந்திய நகரங்கள்….

naveen santhakumar

JEE, NEET பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை; மத்திய அமைச்சகம் அதிரடி!  

News Editor