இந்தியா

டிசம்பர்-5 பிரதமரின் உருவப்படம் எரிப்பு….டிசம்பர்-8 முழு அடைப்பு….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெறக்கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் பல்வேறு எல்லைகளில் 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக விவசாய குழுக்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.அந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்து, விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ALSO READ  பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகிக்கும் தமிழக பெண்..!!!

இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சார்பில் வரும் 8-ம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஹரியானா-டெல்லி எல்லையான சிங்கு பகுதியில் போராட்டம் நடத்திவரும் பாரதீய கிசான் அமைப்பின் பொதுச்செயலாளர் லஹோவால் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், 

“நேற்று நடந்த பேச்சுவார்த்தையின் போது வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என அரசாங்கத்திடம் கூறினோம்.நாடு முழுவதும் டிசம்பர் 5-ம் தேதி பிரதமர் மோடியின் உருவப்படங்கள் எரிக்கப்படும்.டிசம்பர்-8-ம் தேதி நாடு முழுவதும் ஒரு நாள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதுச்சேரியின் 15 வது முதலமைச்சரானார் என்.ரங்கசாமி !

News Editor

Bukmeker şirkəti Mostbet Azərbaycan APP yükləmə

Shobika

மத்தியப் பிரதேச கவர்னர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்…. 

naveen santhakumar