இந்தியா சினிமா

‘fat-free’ பிளாஸ்டிக் சர்ஜரி விபரீதம் .. நடிகை திடீர் மரணம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

Kannada Actress Chetana Raj Dies During Fat Removal Surgery

‘fat-free’ பிளாஸ்டிக் சர்ஜரியால் 21 வயதான கன்னட சின்னத்திரை நடிகை மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

21 வயதான கன்னட சின்னத்திரை பிரபலம் சேத்தனா ராஜ். அவர் தனது அழகைக் கூட்ட ‘fat-free’ பிளாஸ்டிக் சர்ஜரியை தனது பெற்றோரிடம் சொல்லாமல், தோழிகளுடன் சேர்ந்து பெங்களுர் ராஜாஜி நகரில் உள்ள ஷெட்டிஸ் காஸ்மெட்டிக் செண்டரில் நேற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

அப்போது அவரது நுரையீரலில் திரவம் சேர்ந்து மூச்சுதிணறல் ஏற்பட்டதால் காஸ்மெட்டிக் செண்டர் மருத்துவர்கள் சேத்தனாவை அருகில் உள்ள காடே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அங்குள்ள மருத்துவர்கள் நடிகைக்கு கார்டியாக் அரெஸ்ட்டிற்கு சிகிச்சை அளித்தனர்.

ALSO READ  இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது ஃபாஸ்டேக் முறை...!

ஆனால் மருத்துவர்கள் பெரும் முயற்சி செய்த போதும் சேத்தனா ராஜை காப்பாற்ற முடியவில்லை மருத்துவமனையிலேயே நடிகையின் உயிர் பிரிந்தது. தகவலறிந்து வந்த நடிகை சேத்தனா ராஜின் பெற்றோர், மருத்துவர்களின் அலட்சியம் தான் தங்களின் மகள் மரணத்திற்கு காரணம் என குற்றம்சாட்டி
போலீஸிலும் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் உடல் எடையை குறைக்க எடுத்த அறுவை சிகிச்சை இளம் நடிகையின் உயிரை பறித்த சம்பவம் கன்னட சின்னத்திரையில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்டுத்தியுள்ளது. மேலும் சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்களும் சேத்னா மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

friendship படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாகும் ஹர்பஜன்

Admin

கேரளாவில் தொடங்கியது உள்ளாட்சி தேர்தல்:

naveen santhakumar

முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்:

naveen santhakumar