இந்தியா

முடிவுக்கு வரும் விவசாயிகளின் போராட்டம்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வேளாண்  சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் 55வது நாளாகப் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒன்பது முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும். இந்த பேச்சுவார்த்தைகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன.  

இந்நிலையில் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நேற்று 10வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மத்திய அரசு, புதிய வேளாண் சட்டங்களை ஒன்று அல்லது ஒன்றரை வருடங்களுக்கு நிறுத்தி வைக்க தயார் என கூறியுள்ளது. விவசாயிகள் இதுகுறித்து ஆலோசனை செய்துவிட்டு முடிவை தெரிவிப்பதாக மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில்,  “விவாதத்தின்போது வேளாண் சட்டங்களை ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக நாங்கள் தெரிவித்தோம். இதை விவசாய சங்கங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. விவசாயிகள் தங்களின் முடிவை ஆலோசித்து வரும் 22 ஆம் கூறுவதாக தெரிவித்துள்ளனர் என கூறியுள்ளார்.

ALSO READ  "டெடி" படத்தில் பொம்மையாக நடித்தவர் புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு !


மேலும் பேச்சுவார்த்தை சரியான பாதையில் செல்வதாகவும், 22 ஆம் தேதி தீர்வு எட்டப்பட வாய்ப்பு இருப்பதாகவும் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

#delhi #farmeract #newfarmeract #farmer #panjab #delhiprotest #centralgovt #narendrasigntomar #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டெல்லி ஜாமியா பகுதியில் துப்பாக்கி சூடு- ஒருவர் காயம்

Admin

ஓ.பி.சி பட்டியலில் திருநங்கைகள் -மத்திய அரசு முடிவு..!

Admin

Мостбет Букмекерская Контора официальному Сайт: Вход, Регистрация, Лайв, Мобильное Приложени

Shobika