இந்தியா

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் அமைந்துள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் “பெண்களின் சபரிமலை” என்று அழைக்கப்படுகிறது.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. காலை, மதியம், மாலை பூஜைகளை கோவில் பூசாரிகளே நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கருவறையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டபோது பூசாரிகளும் வெளியே இருந்ததால் தீ மளமளவன கூரை வரை பரவியது. இதில் கோவிலின் கூரைகள் முழுவதும் சேதமடைந்தது.

தீவிபத்து ஏற்பட்டவுடன் பொதுமக்களும், தீயணைப்பு துறை வீரர்களும் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று காலை வழக்கம்போல் தீபாராதனை நடைபெற்றது. அந்த தீபத்தில் இருந்து எழுந்த தீ தான் தீ விபத்திற்கு காரணம் என்று போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Share
ALSO READ  மூன்று நாட்கள் இந்த பகுதிகளில் வறண்ட வானிலையே நிகழும் :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Bukmeker Və Kazino Icmal

Shobika

Mostbet, Azərbaycanda ən yaxşı onlayn kazinolardan bir

Shobika

சர்தார் வல்லபாய் படேல் சிலையை காண ரயில்வேத்துறை சுற்றுலா ரயில் அறிமுகம்

News Editor