இந்தியா

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயம் – நிதியமைச்சர் விளக்கம் …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

பொதுத்துறை வங்கிகளில் எவற்றைத் தனியார்மயமாக்குவது என்பதை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்திருந்த பட்ஜெட்டில் பல திட்டங்களை அறிவித்திருந்தது. இதற்கான நிதி பற்றாக்குறையை பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதன் மூலம் பெற முடிவெடுத்தது.

ALSO READ  இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 உதவித்தொகை: முதல்வர் அதிரடி

இந்நிலையில் தனியார்மயமாகும் வங்கிகள் குறித்த பட்டியலை நிதி ஆயோக்கிடம் வழங்கியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்டரல் பேங்க் ஆஃப் உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் இடம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தன.

இதனைத் தமிழக எம்.பி.க்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது என வலியுறுத்தி கடிதம் வழங்கினர்.

ALSO READ  நாளை ஒன்றிய அரசின் அமைச்சரவை கூட்டம்
Image

இவர்கள் அளித்த மனுவுக்கு பொதுத்துறை வங்கிகளில் எவற்றைத் தனியார்மயமாக்குவது என்பதை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒடிசா வெள்ளப்பெருக்கு – ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு..

Shanthi

Пин Ап Заносы как Выигрывать Крупные проценты В Онлайн-казино весть, Статьи, Обзор

Shobika

நேற்று இர்ஃபான் கான் இன்று ரிஷி கபூர்… அடுத்தடுத்த மரணங்கள்.. அதிர்ச்சியில் பாலிவுட்….

naveen santhakumar